அகத்தியர் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வணங்கிச் சென்ற சிவன் கோயில்
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/104 2 May 2016
திருகோணமலையின் தெற்கில் உள்ள மூதூர் பிரதேசத்தில் உள்ள கங்குவேலி கிராமத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள காட்டில் அக
ஸ்திய ஸ்தாபனம் சிவன் கோயில் அமைந்துள்ளது.
பண்டைய காலத்தில் அகஸ்த்திய மாமுனிவர் இப்பகுதிக்கு வந்த போது ஓர் சிவலிங்கத்தை இவ்விடத்தில் ஸ்தாபித்து வணங்கியதாக திருக்கரசை புராணம் கூறுகிறது.
மேலும் அகத்தியர் இங்கு ஓர் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ பயிற்சிக் கூடத்தை நடத்தி வந்தார் எனவும் தெரிகிறது. இவை தொடர்பான தொல்பொருள் சின்னங்கள் இன்றும் இவ்வாலய வளா கத்தில் காணப்படுகின்றன.
இங்கு அகத்தியர் வழிபட்ட புராதன சிவலிங்கம், திரிசூலக் கல் வெட்டு, மருத்துவ தொட்டி, கல் உரல் போன்றவை காணப்படுகி ன்றன.
மருத்துவ கூடத்தின் கல் தூண்களும், அகத்தியர் தொடர்பான மேலும் பல தொன்மைமிக்க கட்டிட இடிபாடுகளும் இங்கே காணப் படுகின்றன.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.
இதைநானும் சென்ற பார்த்துவந்தேன் 2018 இல்
ReplyDelete