Monday, April 20, 2020

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் முற்றாக அழிந்துபோன சந்திரசேகரேஸ்வரம்

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் முற்றாக அழிந்துபோன    சந்திரசேகரேஸ்வரம்

என்.கே.எஸ்.திருச்செல்வம்
MKS/133     25 Feb 2020

மாத்தறை நகரின் கிழக்கில் சுமார் 6 கி.மீ தூரத்தில் அமைந் துள்ள தெவுந்தர எனும் தெய்வந்துறையில் இவ்வாலயம் அமைந்தி ருந்தது. இலங்கையின் தென்முனை நகரமான தெவுந்தரயில் கடற் கரையிலிருந்து சுமார் 20 மீற்றர் தூரத்தில் மஹரம்பே என்றழைக்கப் படும் இடத்தில் “கோவில வத்த” என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் தான் புராதன சிவன் கோயில் அமைந்திருந்ததாக உறுதியாகக் கூறப்படுகிறது. இதற்கு சில காரணங்கள் உள்ளன. இந்த இடம் இன் றும் “கோவில வத்த” என்றழைக்கப்படுகிறது. இது மட்டுமல்லாது இவ்விடத்தில் நிலத்திலிருந்து பல சிவாலயச் சின்னங்கள் கிடைக் கப் பெற்றுள்ளன.
இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றுதான் சந்திர சேகர ஈஸ்வரம் எனப்படும் சந்திர மௌலீஸ்வரமாகும். இது தொண்டேஸ் வரம் எனவும் கூறப்படுகிறது. விஜயன் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இப்பஞ்ச ஈஸ்வர ங்கள் இலங்கையில் அமைந்திருந்தன. அன்றே இந்த ஐந்து ஆலயங் களும் புகழ்பூத்த நிலையில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. வடக் கில் நகுலேஸ்வரமும் வடமேற்கில் திருக்கேதீஸ்வரமும், தெற்கில் சந்திசேகரேச்சுரமும் அமைந்திரு ந்தாக வரலாற்று நூல்களும், இலக் கிய நூல்களும் கூறுகின்றன. இவ்வாலயங்கள் சிவபக்தன் இராவ ணேஸ்வரனால் ஸ்தாபிக்கப்பட்டு வழிபடப்பட்டன என்பது ஐதீகம்.

பஞ்ச ஈஸ்வரங்களில் முற்றாக அழிந்துபோன ஈஸ்வரம்
இத்தனை சிறப்புப் பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் இன்று இல் லாது முற்றாக அழிந்து போய்விட்ட தலம் தான் சந்திரசேகர ஈஸ்வ ரமாகும். கிறிஸ்துவுக்கு முன் 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு அமைக் கப்பட்ட இவ்வாலயத்தின் தலம் அன்றைய மக்களால் “தேவநகரம்” என்று தெய்வந்துறை என்றும் அழைக்கப்பட்டது. தெய்வந்துறை என்பது தெய்வம் இறங்கியதுறை என்ற ஐதீகத்தில் வழங்கப்பட்டது. இங்கு முன்பு பல கோயில்கள் அமைக்கப் பட்டிருந்ததால் இது கோயில் நகரம் என்றும் குறிப்பிடப்பட்டது.



















புராதன ஆலயத்தின் லிங்கமும் நந்தியும்

சந்திரசேகரர் கோயில் இங்கு அமைந்திருந்த தற்கான மேலும் சில சான்றுகள் அண்மை யில் கிடைக்கப் பெற்றன. புராதன ஆலயத் தின் இடி பாடுகள் மீது பிற் காலத்தில் கட்டப்பட்ட ஒத்பிலிம விஹா ரையின் முன்பக்கம் இருந்த நிலத்தில் தோட்டம் அமைப் பதற்காக இங்குள்ள தொண்டர் ஒருவர் நிலத்தை அகழ்ந்த போது 4 அடி உயர மும் 2 ½ அடி விட்டமும் கொண்ட ஆவுடையாருடனும் கூடிய பெரிய சிவலிங்கமும் நந்தியும் வெளிப்பட்டன. 

போர்த்துக்கேயரின் அட்டகாசத்தின் பின் இவ்விடத்தில் எந்த வொரு இந்துக் கோயில்களும் சிவ தேவாலயங்களும் அமைக்கப் படவில்லை. ஆகவே, இந்த லிங்கம் புராதன சிவாலயத்தின் சின்னங் களில் ஒன்றுதான் என உறுதியாகக் கூறப்படுகிறது. அத்துடன் அது அளவில் பெரிதாக இருப்பதால் சந்திரசேகர ஈஸ்வரத் தின் மூல மூர்த் தியாகவும் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இதன் ஆவுடை யார் மெல்லியதாகவும் தட்டையாகவும் உள்ளதோடு லிங்கம் உயர மாகவும் பருமனற்றதாகவும் காணப்படுகிறது. 


என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 

No comments:

Post a Comment