Friday, April 17, 2020

இலங்கைத் தமிழர்கள் தென்னிந்திய தமிழர்களைவிட காலத்தாலும் வழிபாட்டு பாரம்பரியத்தாலும் முற்பட்டவர்களா?



இலங்கைத் தமிழர்கள் தென்னிந்தியத் தமிழர்களை விட காலத்தாலும், வழிபாட்டுப் பாரம்பரியத்தாலும் முற்பட்டவர்களா?


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/105    15 Jan 2017

























தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற இடத் தில் பெருங்கற்கால தொல்லியல் மையம் ஒன்றில் அகழ்வாராய்ச் சிகள் நடைபெற்றன. இது 2600 வருடங்கள் பழமையான தொல்லியல் மையம் என ஆய்வறிக்கை கூறுகிறது. இங்கு 7000 தொல்லியல் சின் னங்கள் கிடைத்ததாகவும், இவற்றில் வழிபாடு தொடர்பான சின்ன ங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் 3000 வருடங்கள் பழமையான பெருங் கற் கால தொல்லியல் மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவற் றில் கிடைத்த சுடுமண் சின்னங்களில் லிங்க வடிவங்கள் மற்றும் இரும்பு வேல் சின்னங்களும், பெண் தெய்வ உருவங்களும் கிடைத் துள்ளன.

   


பொம்பரிப்பு, அனுராதபுரம், பூநகரி, ஆகிய இடங்களில் இரும்பு வேல் சின்னங்களும், நிக்காவெவ, உருத்திராபுரம், பின்வெவ ஆகிய இடங்களில் லிங்க வடிவங்கள், பெண் தெய்வ வடிவம் ஆகியவை யும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் படங்களை கீழே இணை த்துள்ளேன்.
உசாத்துணை நூல்கள்.
( ஈழத்து இந்து சமய வரலாறு-பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்)
(ஸ்போலியா செலனிகா-பேராசிரியர் ஜீ.ஏ.பி.தெரனியகல)
(தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும் கலையும்-பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம்)

















அப்படியானால் லிங்க வழிபாடும், வேல் வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் இலங்கையில் இருந்து தான் தென்னிந்தியாவுக்கு பரவி யுள்ளதா? இவ்வழிபாடுகளுக்கு தென்னிந்தியத் தமிழருக்கு இலங் கைத் தமிழர்கள் தான் முன்னோடிகளா?

இலங்கைத் தமிழர்கள் தென்னிந்திய தமிழர்களை விட காலத்தா லும், வழிபாட்டு பாரம்பரியத்தாலும் முற்பட்டவர்கள் எனும் எனது சந்தேகம் இதன் மூலம் வலுப்பெறுகிறது.

இலங்கைத் தமிழர்கள் சிவலிங்க வழிபாட்டையும், முருகவேல் வழி பாட்டையும், பெண் தெய்வ வழிபாட்டையும் இந்தியத் தமிழர்களுக் குக் கொடுத்திருப்பார்கள் எனவும், இதனால் தான் ஈழத்தமிழர்கள் இன்று வரை தமிழர் வழிபாட்டையும், கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் தென்னிந்தியத் தமிழர்களை விட அதிகமாக பேணி பாதுகாத்து கடைப்பிடித்து வருகிறார்கள் எனவும் எண்ணத் தோன் றுகிறது.






















ஈழத்தமிழரின் மரபணு இந்தியத் தமிழருடன் 16.60% வீதம் தான் பொருந்துகிறது. ஆனால் வங்காளியர்களுடன் 28.10% வீதமும், சிங்க ளவர்களுடன் 55.20% பொருந்துகிறது என "இலங்கையில் சிங்களவர்" எனும் நூல் கூறுகிறது.

உசாத்துணை நூல் 
(பக்தவத்சல பாரதி-மானிடவியல் துறை, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்-2016)

எனவே ஈழத்தமிழர்கள் தனித்துவ மானவர்கள். "ஈழத்தமிழருக்கு தமிழ் நாட்டோடு மொழியைத் தவிர வேறெந்தத் தொடர்பும் இல்லை." எனக் கூறப்படுவது உண்மை போலத் தெரிகிறது.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.

No comments:

Post a Comment