Wednesday, April 22, 2020

இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம் பாகம்-1 நூல் அறிமுகம்


இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்பாகம்-1நூல் அறிமுகம் 


நமக்குத் தெரிந்த சம்பிரதாயங்களும், தெரியாத உண்மைகளும்

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/145    21 April 2020  


பல்லாயிரம் ஆண்டு காலமாக இந்து சமயத்தில் ஏராளமான வழி பாடுகளும், தத்துவங்களும், நடைமுறைகளும், சடங்குகளும், சம்பி ரதாயங்களும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை நாம் அறிந்த விடயமே. இந்து சமயத்தில் இந்துக்களுக்கு வழி காட்டியாக வேதங் கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள், உபநிடதங்கள், திவ் யப் பிரபந்தங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவை விளங்குகின் றன. இவற்றில் சொல்லப்படாத விடயங்களே இல்லை எனலாம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்து சமய நூல்களில் கூறப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் இந்து சமய வழிபாடுகள், தத்து வங்கள், நடை முறைகள் ஆகியவை அனைத்திற்கும் அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் உடல் சுகாதாரம் தொடர்பான அர்த்தங்கள் பல உள்ளன.

இதுவரை காலமும் இவ்வர்த்தங்கள் பற்றி சாதாரண மக்கள்  அறிந் திருக்கவில்லை. இவற்றை அறிந்து வைத்திருந்த ஒரு சில அறிஞர் களும் இவை பற்றிய விபரங்களை சாதாரண மக்களிடம் எடுத்துச் செல்லவுமில்லை. கடந்த சில வருடங்களாக முகப் புத்தகம் எனும் சமூக ஊடகம் சாதாரண மக்கள் மத்தியில் பிர பல்யமான கால கட்டத்தில் பல இந்துக்கள் இந்து சமயத்தை ஆராய்வதிலும், இந்து சமய நூல்களில் கூறப்பட்டுள்ள பலதரப்பட்ட விடயங்களுக்கான உண்மையான விளக்கங்களையும், காரணங்களையும், அவை தொடர்பான அறிவியல் அர்த்தங்களை யும், கண்டறிவதிலும் அவ ற்றை தமது சமூகவலைத் தளங்களில் பதிவிடுவதிலும், தமது நண் பர்களுக்கிடையில் பகிர்வதிலும் ஆர் வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக வலைத்தளங்கள், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் இந்து சம யம் தொடர்பான பல அறிவியல் பூர் வமான விடயங்கள் வரத் தொடங்கின.

இந்நிலையில் நானும் கடந்த மூன்று வருடங்களாக பல இந்து சமய நூல்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள அறிவியல் தொடர்பான விட யங்கள் பலவற்றை எனது முகநூல்களான NKS.Thiruchelvam, சனாதன தர்மம், மற்றும் எனது முகநூல் பக்கங்களான லங்காபுரி, உலகம் முழுவதும் இந்து சமயம், முகநூல் சைவம் தமிழ், சைவம் இந்து சமயம் ஓர் அறிவியல், குமரி நாட்டு சைவத் தமிழன் ஆகியவற் றின்  மூலம் நண்பர்களு க்கு பதிவிட்டு வந்தேன். அதேசமயம் வேறு பல இந்து சமய ஆராய்ச்சியாளர்களின் அறிவியல் தொடர்பான தகவல்களையும் இம்முகநூல் பக்கங்கள் மூலம் பகிர்ந்து வந்தேன்.

இத்தகவல்கள் அனைத்தையும் ஓர் தொகுப்பு நூலாக வெளி யிட வேண்டும் என எனது நண்பர்கள் பலர் வேண்டுகோள் விடுத்தனர். அதன் பின்பு இதற்காக மேலும் பல தகவல்களை சேகரித்தேன். இதன் மூலம் இந்து சமயம் தொடர்பான அரிய பல அறிவியல் விடய ங்கள் ஓர் ஆவணமாக இந்து மக்களின் கைகளுக்குப் போய்ச்சேர வேண்டும் என விரும்பினேன். அதன் பயனாக இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம் எனும் பெயரில் இத்தொகுப்பு நூல் வெளி வருகிறது.

இந்நூலில் நான் ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளுடன் Tamil and Vedas எனும் வலைத்தளத்தில் லண்டன் திரு. சுவாமிநாதன், திரு. எஸ். நாகராஜன் ஆகியோர் எழுதிய கட்டு ரைகளும், திரு. ஏ. விஜய குமார் அவர்களின் முகநூலில்  அவர் எழுதிய அரிய பல கட்டுரை களும், Hinduism facts-இந்து சமய உண்மைகள், அறிவியல் சார் ந்த இந்துமதம் ஆகிய முகநூல்களில் பதிவிடப்பட்ட கட்டுரைகளும், தமிழ் இந்து-தமிழரின் தாய்மதம்ஆகிய வலைத்தளங்களில் பதி விடப்பட்ட அரிய பல கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. அக்கட்டு ரைகளை எழுதிய மேற்குறிப்பிடப்பட்டுள்ள சமூக ஊடகங்களுக் கும், அவற்றில் கட்டுரைகளை எழுதிப் பதிவிட்ட லண்டன் திரு. சுவாமிநாதன், திரு.எஸ்.நாகராஜன், திரு.ஏ.விஜயகுமார், திரு. அரவிந் தன் நீலகண்டன் ஆகிய ஆராய்ச்சியாளர்களுக்கும் எனது நன்றிக ளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்துக்கள் மட்டுமல்லாது இந்து சமயத்திலுள்ள அறிவியல் விடயங் களை அறிய விரும்பும் அனைவரின் கரங்களுக்கும் இந்நூல் போய்ச் சேர வேண்டும் என்பதால், எந்தவித இலாபமும் கருதாமல்,இந்நூலை அச்சிட ஏற்பட்ட செலவை மட்டும் நூலின் விலையாகக் கொண்டு இந்நூலை வெளியிடுகிறேன்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்.
இலங்கை

No comments:

Post a Comment