Sunday, April 19, 2020

யார் தமிழர் ? ஓர் வரலாற்று நோக்கு பகுதி 1,2,3


யார் தமிழர் ?  ஓர் வரலாற்று நோக்கு     பகுதி -1


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/130    13 Jan 2020


வரலாற்றில் தமிழருக்கு வழிபாடு உண்டு, 
கடவுள் உண்டு, மதம் உண்டு.

தமிழ் நாட்டில் திராவிட வாதிகள், நாத்திக வாதிகள் மற்றும் இந்து சமயத்திற்கு எதிரானவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூறும் மிகப்பெரிய பொய்தான் வரலாற்றில் தமிழனுக்கு கடவுள் இல்லை, வழிபாடு இல்லை, மதம் இல்லை எனும் கூற்று. அப்படியானால் தமிழர்கள் எல்லோரும் நாத்திகர்களா?

தமிழரின் வரலாறு சங்க இலக்கியங்களில் இருந்து தான் எமக்குக் கிடைக்கிறது. இவர்களுக்கு சங்க இலக்கியங்கள் வேண்டுமாம். ஆனால் அதில் கூறப்பட்டுள்ள கடவுள் வழிபாடு வேண்டாமாம்.
தமிழ், தமிழன், நான் தமிழேண்டா என்றெல்லாம் கூச்சல் போடும் இவர்களுக்கு இந்த தமிழ் எங்கிருந்து வந்தது என்பதை தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

சிவனையும், முருகனையும் வணங்கி அகத்தியரும், அவரின் சீடர் தொல்காப்பியரும், நக்கீரரும்,ஔவையாரும்,திருவள்ளுவரும் கொடுத்த தமிழ் தான் நமது ஜீவநாடி என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இவர்கள் கூற்றுப்படி பார்த்தால் அகத்தியர், தொல்காப்பி யர், நக்கீரர், ஔவையார், திருவள்ளுவர் ஆகியோர் நாத்திகர்களாக இருக்க வேண்டுமே?

இவர்கள் நாத்திகர்கள் என எந்த சங்க நூல்களிலாவது கூறப்பட்டு ள்ளதாசிந்தித்துப் பாருங்கள்! தமிழனுக்கு கடவுள் இல்லை, வழி பாடு இல்லை, மதம் இல்லை என்பது எவ்வளவு பொய் என்று...

தமிழர் தோற்றம் பெற்ற குமரிநாடு.
 மனித இனம் தோற்றம் பெற்றதாக ஆய்வாளர்கள் கூறும் ஓர் கண் டம் ஆசியாவின் தென்பகுதியில் இருந்தது. இது ஆபிரிக்காவின் கிழக்குக் கரை வரையும், ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதி வரை யும் பரந்திருந்தது. சுமார் 1,00,000 ( ஒரு லட்சம் ) ஆண்டுகளுக்கு முன் இங்குதான் மனிதன் தோன்றினான். ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் கள் இதை லெமுரியா என்றழைத்தனர்.


இக்கண்டமே தமிழர் தோற்றம் பெற்ற குமரிக் கண்டமாகும். இக் குமரி நாட்டில் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன் தமிழரும், தமிழ் மொழியும், தமிழர் வழிபாடும் தோற்றம் பெற்றன.

தமிழருக்கு மதமே இல்லை, வழிபாடு இல்லை, கடவுள் இல்லை  என  நாத்திகவாதிகள் பொய்யுரைத்து வரும் இக்காலகட்டத்தில், 50,000 ஆண்டுகளுக்கு முன்பு குமரி நாட்டு தமிழர் மூவகை மதங்களை கடைப்பிடித்து வந்தனர் என்பது எத்தனை தமிழருக்குத் தெரியும்.

குமரி நாடு பற்றியும், பண்டைய தமிழர் வரலாறு பற்றியும் ஆராய் ந்து பல நூல்களை எழுதிய தமிழறிஞர் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் தமிழரின் இம்மூவகை மதங்களாவன சிறுதெய்வ வழி பாடு, பெருந்தெய்வ மதம், கடவுள் சமயம் எனக் கூறியுள்ளார்.

குமரி நாட்டுத் தமிழரில் பெருந்தொகையினர் ஐந்திணை நிலங்க ளில் வாழ்ந்த நாட்டுப் புறத்தாரும், சிறு தொகையினர் திணைமயக் குற்ற நகரவாணருமாக இருவகையில் வளர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஐந்திணை நிலங்களாவன குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்றழைக்கப்பட்டன. இவ்வைந்து நிலங்களுக்கும் ஐந்து தெய்வங்கள் குமரிநாட்டு மக்களால் வழிபடப்பட்டன. அந்த தெய்வங்கள் யாவை?

தமிழர் வாழ்ந்த ஐந்திணை நிலங்களின் தெய்வங்கள்

பண்டைய காலத்தில் குமரி நாட்டுத் தமிழர் வாழ்ந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணை நிலங்களிலும் ஐந்து தெய்வங்கள் குமரிநாட்டு மக்களால் வழிபடப்பட்டன. 


அந்த தெய்வங்கள் குறிஞ்சி நில மக்கள் சேயோன் எனும் முருகனை யும், முல்லை நில மக்கள் மால் எனும் மாயோனையும், மருதநில மக்கள் வேந்தன் எனும் இந்திரனையும்,  நெய்தல் நில மக்கள் வாரணன் எனும் வருணனையும், பாலை நில மக்கள் கொற்றவை எனும் காளியையும் தமது தெய்வங்களாக வழிபட்டனர்.

தமிழரின் மிகப்பண்டைய சங்ககால நூலான தொல்காப்பியத்தில் பண்டைத் தமிழரின் இந்த தெய்வ வழிபாட்டைப் பற்றி தொல்காப் பியர் பின்வருமாறு கூறியுள்ளார்.

 “மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

(தொல்காப்பியம்,பொருள்-அகத்திணை-05)

பொருள்:

காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தின் கடவுளாக மாயோனாகிய திருமாலும், மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தின் கடவுளாக சேயோனாகிய    முருகப்பெருமானும், வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தின் கடவுளாக வேந்தன் ஆகிய இந்திரனும், கடலும் கடல் சார் ந்த நெய்தல் நிலத்தின் கடவுளாக வருண பகவானும் குறிக்கப்பட்டு ள்ளனர்.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து காணப்பெற்ற பாலைப் பகுதியில் "கொற்றவை" வழிபாடு நிகழ்ந்ததாக சங்க நூல் கள் வழியும்,  முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து என்று சங்கம் சார்ந்த சிலப்பதிகாரம் போன்ற நூல் வழியும் அறிய முடிகிறது.


குறிஞ்சி நிலத் தமிழர் வாழ்வும், வழிபாடும்

மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த தமிழர் தமது தெய்வத்தை தீயின் சுடராக நினைத்து சேந்தன் (சிவந்தவன்) சேயோன் என்ற பெயரில் வழிபட்டனர். இது பற்றி சங்ககால நூலான திருமுருகாற்றுப்படையில் பின்வருமாறு கூறப் பட்டுள்ளது.

 செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்

கச்சினன் கழனினன் செச்சைக் கண்ணியன்

குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்


(திருமுருகாற்றுப்படை  206-10)  

பொருள்:

திருமுருகனைப் போல வேலினை உடைய வேலன், சிவந்த மேனி யனாகக் காட்சியளிப்பவன்; சிவப்பு நிற ஆடையை அணிந்துள்ள வன்; சிவந்த அடிப்பாகத்தையுடைய அசோகமரத்தின் குளிர்ச்சி பொருந்திய தளிர்களை இரு காதுகளிலும் அணிந்துள்ளவன்; இடை யில் கச்சை அணிந்துள்ளவன்; கால்களில் வீரக் கழல்களை அணிந் துள்ளவன்; சிவந்த வெட்சி மலர்களை தலை முடியில் கண்ணியாக அணிந்துள்ளவன்.



முருகன் சிவந்த மேனியை உடையவன் என சங்ககால நூல்களில் முருகனைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது தெரியாமல், தற்போது சில நாத்திகவாதிகள் முருகனை தலைப்பாகையுடனும், கருத்த உருவத் துடன் வரைந்து உண்மையான உருவத்தை சிதைத்து வருகின்றனர்.

என்.கே.எஸ்.திருச்செல்வம் 
வரலாற்று ஆய்வாளர் 
இலங்கை




No comments:

Post a Comment