Monday, April 20, 2020

தீகவாபியில் சிவன் கோயில்

தீகவாபியில் சிவன் கோயில்

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/136   17 April 2020

அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு 2000 வருடங்களுக்கு முன்பு நாக வழிபாடே நிலவியது. இது ஓர்  நாக மன்னர்களின் இராச்சியமாக விளங்கியது.

இங்கிருந்த நாக கோயிலைத் தரிசிக்கவே புத்த பகவான் இங்கு வருகை தந்ததாகவும், இதன் பின் புத்த பகவான் விசம் செய்த 16 புனித ஸ்தலங்களில் ஒன்றாக தீகவாபியும் விளங்கியதாக மகாவ ம்சம் கூறுகிறது.

நாக வழிபாடு நிலவிய தீகவாபியில் பண்டைய  காலத்தில் சிவ வழி பாடும் நிலவியுள்ளது. இங்கு சிவன் கோயில் ஒன்றும் இருந்திருக்க லாம் என நம்பக் கூடிய வகையில் இங்கு சில தொல்பொருள் சின்ன ங்கள் கிடைத்தன.



அண்மையில் தீகவாபியில் உள்ள தூபியின் அருகில் இருந்த இர ண்டு கட்டிட அத்திவாரங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. அப்போது ஒரு கட்டிடத்தில் இருந்து புத்த பகவானின் சிலையில் தலைப்பகுதி மட்டும் கிடைத்தது. இது ஓர் பெளத்த சிலை மனை எனக் கூறப்பட்டது.

அடுத்த கட்டிட அத்திவாரத்தில் ஓர் பழமை வாய்ந்த நந்தியின் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்ட நந்தியாகும். பல நூற்றாண்டு காலம் மண்ணுள் புதைந்து கிடந்த தால் அதன் அங்க லட்சணங்கள் சிதைந்து காணப்பட்டன. நந்தி சிலை கிடைக்கப்பெற்ற கட்டிடம் ஓர் சிவன் கோயில் என நம்பப்படு கிறது.  சிவன் கோயிலின் முன்பாக பலிபீடத்தின் அருகில் இருந்த நந்தி சிலையாக இது இருக்க வேண்டும் எனக் கருத இடமுண்டு.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment