Tuesday, April 21, 2020

யாள காட்டின் மத்தியில் பல்லவர் கால தாராலிங்கம்

யாள காட்டின் மத்தியில் பல்லவர் கால தாராலிங்கம்

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/140    19 April 2020

பாண்டிய சத்திரிய வம்சத்தவர்களால் 2200 வருடங்களுக்கு முன்பு ஆட்சி செய்யப்பட்ட தென்னிலங்கையில் உள்ள காடுகளில் அவர்கள் வழிபட்ட சிவன் மற்றும் முருக வழிபாட்டுத் தலங்கள் பல காணப்படுகின்றன.
இவற்றைத் தேடி யாள காட்டிற்குச் சென்ற போது, ஐந்து அடி உயர மான, மிகவும் பழமை வாய்ந்த, சற்று சிதலமடைந்தஎட்டுப் பட்டை தாரா லிங்கத்தைக் கண்டேன்.
















யாள காட்டின் மேற்குப் பக்கத்தில் மனித சஞ்சாரமே இல்லாத பல மலைப்பாறைக் குன்றுகள் சூழ்ந்திருக்கும் மகுல் மகா விகாரை என் னும் இடத்திலேயே இத் தாராலிங்கம் உள்ளது. இது ஆவுடையார் அற்ற லிங்கமாகும்.

இதே போன்ற தாரா லிங்கம் மாமல்லபுரத்தில் புலிக்குகை அருகில் காணப்படுகிறது. இது நன்கு நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள் ளது. இது 7-8 ஆம் நூற்றாண்டு காலத்திற்குரியதாகும்.

ஆனால் யாள காட்டில் உள்ள தாரா லிங்கம் மாமல்லபுர லிங்கத்தை விட பழமையானதாக இருக்க வேண்டும். ஏனெனில் இது கரடு முர டாகக் காணப்படுகிறது. மேலும் இது காட்டின் மத்தியில் பராமரிப் பின்றி மழை, வெயில், காற்று ஆகியவற்றினால் சிதலமடைந்திரு க்கலாம் எனவும் நம்ப இடமுண்டு. எனவே யாள காட்டில் உள்ள லிங் கம் 5-6 ஆம் நூற்றாண்டுக் குரியதாக இருக்க வேண்டும்.















மேலும் சிவன், நாகம் போன்ற கடவுள் பெயர்களும் சுவாமி, மகேசன், பெருமகன் ஆகிய தமிழ்ச் சொற்க ளும் பொறிக்கப்பட்ட 5 பிராமிக் கல்வெட்டுகள் இங்கே உள்ளன. இவை இருந்த கற்குகைகளையும் மூன்று கல்வெட்டுகளையும் கண்டேன்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்.
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.

No comments:

Post a Comment