Saturday, April 18, 2020

கன்னியா-பண்டைய சைவத்தமிழரின் பாரம்பரிய அடையாளம் -நூல் அறிமுகம்


கன்னியா-பண்டைய சைவத்தமிழரின் பாரம்பரிய அடையாளம்-

நூல் அறிமுகம் 



என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                          NKS/118     22 Sep  2019


"கன்னியா-பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடை யாளம்" எனும் இந்நூல் நான் எழுதிய 12 வது நூலாகும். இந்நூலில் இராவணன் காலம் முதல் இன்று வரை கன்னியாவில்  காணப்பட்ட சைவ பாரம்பரியம் மற்றும் அன்று முதல் இன்று வரை நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள் ஆகியவை பற்றிய விபரங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன.

இலங்கையில் உள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்களில் கன்னியாவுக்கு தனிச்சிறப்புண்டு. இச்சிறப்பிற்கு காரணமாக இருப்பது இங்கு காணப்படும் இயற்கையான வெந்நீர் ஊற்றுக் களாகும். இவை உலகப் புகழ் பெற்றவை. இலங்கையில் வேறு சில இடங்களிலும்  வெந்நீர் ஊற்றுக்கள் காணப்பட்டாலும், அவற்றுள் கன்னியாவிற்கே முதலிடம் உள்ளது. இதற்கு ஓர் காரணமும் உள்ளது. அதுதான் இவ்வெந்நீர் ஊற்றுக்களுக்கும், இராவணனுக்கும் உள்ள தொடர்பு மற்றும் இராவணன் தனது தாய்க்கு செய்த அந்தியேட்டி கிரிகைகள் பற்றிய ஐதீகம். இவ்வைதீகத்தைப் பின்பற்றி மக்கள் தமது மூதாதையருக்கும் அந்தியேட்டி கிரிகைகள் செய்து, இங்கு காணப்பட்ட கோயில்களிலும் பூஜைகள் செய்து, வணங்கிச் சென்ற மையால் கன்னியா இந்துக்கள் மத்தியில் மிகப்பிரசித்தி பெறக் காரணமாக இருந்தது. எனவே கன்னியா ஓர் சுற்றுலாத்தலம் என்ப தையும் தாண்டி இந்துக்களின் சமய வழிபாட்டு, பண்பாட்டு அம்சங் களுடன் முக்கிய தொடர்பு பட்டிருந்தது.

இத்தனை சிறப்புக்களைக் கொண்ட கன்னியா வெந்நீர் ஊற்று க்கள் காணப்படும் இடத்திற்குச் சென்று, அவ்வெந்நீர் ஊற்றுக்களில் நீராடி, ஓர் புதிய அனுபவத்தைப் பெறும் சந்தர்ப்பம் சுமார் 39 வருடங் களுக்கு முன்பு, அதாவது 1980 ஆம் ஆண்டு எனது 19 ஆவது வயதில் எனக்குக் கிடைத்தது. அன்று இவ்வெந்நீர் கிணறுகளுக்கு அருகில் ஓர் கோயில் இருந்தது. அப்போது மக்கள் பலர் வெந்நீர் ஊற்றுகளில் நீராடி, அருகில் இருந்த கோயிலுக்கும் சென்று வழிபட்டு வந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

அதன்பின் இப்பகுதியில் வசிக்கும் சிறுவர்களின் உதவியுடன், வெந்நீர் ஊற்றுக்கள் இருக்கும் இடத்தின் பின்பக்கமாக செல்லும் ஓர் காட்டுப்பாதை வழியாகச் சென்று, சிறிது தூரத்தில் இருந்த ஓர் தட்டையான மலை உச்சிக்குச் சென்று, அங்கு 60 அடி நீளமான ஓர் சமாதியைக் கண்டேன். இது நான் கன்னியாவிற்குச் சென்ற முதலா வது சந்தர்ப்பமாகும்.

அதன் பின்பு இரண்டு வருடங்களின் பின் 1982ஆம் ஆண்டு மீண் டும் கன்னியாவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இக்காலத்தின் பின்பு 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்தில் போது கன்  னியாவில் இருந்த கோயில்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. அதன் பின்பு, 14 வருடங்களின் பின் 1996 ஆம் ஆண்டு எனது குடும்பம் மற் றும் உறவினர்களுடன் கன்னியாவுக்கு நீராடச் சென்றேன். பின்பு 8 வருடங்களின் பின்பு, 2004 ஆம் ஆண்டு கன்னியாவுக்கு மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த மூன்று தடவைகளும் சுற்றுலா நோக்கோடு கன்னியாவுக்கு சென்ற நான், இந்தத் தடவை அங்கிரு ந்த கோயில்களையும், வெந்நீர்க் கிணறுகளையும் ஆராயும் நோக் கோடு சென்றேன்.

அப்போது சதுர வடிவில் ஏழு வெந்நீர்க் கிணறுகள், அவற்றைச் சுற்றி தட்டையான மதில், இவற்றின் வலது பக்கம் ஓர் மண்டபம், மண்டபத்தின் உள்ளே சிவன்-பார்வதி சிலைகள், அதன் கீழே ஓர் சிறிய சிவலிங்கம், முன்பக்கம் சிதைந்த நிலையில் பண்டைய கோயிலின் அத்திவாரம், அதன் அருகில் சிறிய மேடை அமைக்கப் பட்டு, தகரக்கூரை போடப்பட்ட சிறிய கோயில், மேடை மீது ஓர் பிள்ளை யார் சிலை, கோயிலின் முன் பக்கம் கற்பூரம் கொளுத்தப் பயன்படும் ஓர் கல், (இது தான் பண்டைய கோயிலில் காணப்பட்ட நாகலிங்கம்) இந்தக் கோயிலின் முன்பக்கம் ஓர் அரசமரம், அரச மரத்தின் முன் பக்கம் சாய்ந்த நிலையில் சுமார் 6 அடி உயரமான ஓர் கல் தூண். (ஆனால் அது சாதாரண கல் தூண் அல்ல. எட்டுப் பட்டைகள் செதுக்கப்பட்ட பல்லவர் கால தாராலிங்கம் என்பதை பின்புதான் தெரிந்து கொண்டேன்.) இவைதான் அன்று நான் கண்ட கன்னியா. அதன் பின்பு 2015 ஆம் ஆண்டும், பின்பு பல தடவைகளும் கன்னியாவை ஆராயும் நோக்கோடு அங்கு சென்றுள்ளேன். இந்தக் கால கட்டங்களில் கன்னியா எப்படி இருந்தது என்பதை தேவைப் படும் இடங்களின் இந்நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

கன்னியாவில் பண்டைய காலம் முதல் ஆதி சிவன் கோயில் இருந்தது என்பதற்கான ஆதாரங்களாக மேலே நான் குறிப்பிட்டிரு க்கும்  நாகலிங்கமும், தாராலிங்கமும் விளங்குகின்றன. இவற்றைத் தவிர பண்டைய கோயிலின் சிதைவுகளான சதுர வடிவமான அத்தி வாரம், அதிலுள்ள கற்கள், பண்டைய செங்கற்கள், தூண்களின் துண்டங்கள், தூண் தாங்கும் குழிக்கற்கள் ஆகியவையும் கன்னியா கோயில்களின் தொல்பொருள் சின்னங்களே.

கன்னியாவில் சிவன் கோயிலும், பிள்ளையார் கோயிலும் 200 வருடங்களுக்கு முன்பு இருந்தமை பற்றி ஐரோப்பிய அறிஞர்கள் பலர் தமது ஆய்வு நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். மொத்தமாக 15 அறிஞர் கள் தமது ஆய்வு நூல்களில் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பற்றியும், இவற்றின்  அருகில் இருந்த  சிவன் மற்றும் பிள்ளையார் கோயில்கள்  பற்றியும், இராவணனுக்கும் கன்னியாவுக்கும் இருந்த தொடர்புகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரியமிக்க சமய பண்பாடு மற்றும் வழி பாட்டுடன் தொடர்புடைய, இத்தனை சிறப்புமிக்க புனிதத் திருத் தலம் பற்றிய ஓர் வரலாற்று நூலை இதுவரை சைவத் தமிழ் அறிஞ ர்கள் ஒருவரும் எழுதியிருக்கவில்லை என்பது எனக்குப் பெரும் வேதனையைத் தந்தது.

இந்நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு கன்னியா வெந்நீர் கிணறுகள் மற்றும் பிள்ளையார் கோயில் இருந்த பகுதி திடீரென சில பெளத்த பிக்குகளால் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், சில வருடங் களின் பின் வெந்நீர்க் கிணறுகளின் பின் பக்கம் பெளத்த விகாரை யும் கட்டப் பட்டதாகவும், பிள்ளையார் கோயில் இருந்த இடத்திலி ருந்து அகற்றப்பட்டு, பண்டைய கோயில்களின் அத்திவாரம் தோண் டப்பட்டு, அவை பெளத்த தூபிக்குரியவை எனக் கூறப்பட்டதாகவும், தொல்பொருள் திணைக்களமும் இவற்றை தமது கையிலெடுத்த தாகவும், அரச வர்த்த மானியில் இவ்விடம் பெளத்த தூபிக்குரியது என அறிவிப்பும் செய்யப்பட்டதாகவும் அறிந்தேன்.

அதேசமயம் கன்னியா வெந்நீர் ஊற்றுகளுக்கு அருகில் பெளத்த விகாரை அல்லது தூபி இருந்தமை பற்றி ஐரோப்பிய அறிஞ ர்கள் அல்லது இலங்கை அறிஞர்கள் எழுதிய எந்த நூல்களிலும் கூறப்பட வில்லை என்பது எனது ஆய்வின் மூலம் நான் கண்டறிந்த உண்மையாகும்.

இதிலே வேடிக்கை என்னவென்றால் இங்கிருந்த சிதைவுகள்  சிவன் மற்றும் பிள்ளையார் கோயில்களுக்குரியவை என்பதற்கான வர லாற்றுக் குறிப்புகள் பல இருந்தும், அரச வர்த்தமானியில் கோயில் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால்  இங்கு பெளத்த தூபி இருந் தமை பற்றிய எந்த வரலாற்றுக் குறிப்புகளின் ஆதாரமும் இல்லாத போதும், இவை  பெளத்த தூபியின் சிதைவுகள் எனக் குறிப்பிட்டுள்ளமை மிகப் பெரிய அநியாயமாகும். தற்போது இவை இங்கிருந்த பெளத்த தூபியின் இடிபாடுகள் என பெளத்த பிக்குகளால் உரிமை கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் எங்கெல்லாம் கற்தூண்களும், புராதன செங்கற் களும், கருங்கல் அத்திவாரங்களும், குழிக்கற்களும் காணப்படுகின் றதோ அங்கெல்லாம் பெளத்த விகாரைகள் இருந்ததாகக் கூறி அங் கிருக்கும் சைவ கோயில்களும், சைவ சமயச் சின்னங்களும் அழிக் கப்பட்டு, அங்கு பெளத்த விகாரைகள் அமைக்கும் ஓர் எழுதாத சட்டம் இலங்கையில் உள்ளதை யாரிடம் போய் சொல்வது?

அப்படியானால் பெளத்த விகாரைகள் மட்டும் தான் கல்லிலே கட்டப்பட்டனவா? எமது முன்னோர்கள் கோயில்களை கல்லிலே கட்ட வில்லையா? தென்னிந்தியாவில் எமது தமிழ் முன்னோர்கள் கட்டிய ஆயிரக்கணக்கான கற்கோயில்கள் உள்ளன. இலங்கையில் அனுராத புரம் மற்றும் பொலநறுவை ஆகிய பண்டைய தலை நகரங்களில் எமது சைவத் தமிழ் முன்னோர்கள் கட்டிய கற் கோயில்கள் பல உள்ளன. பெரும்பான்மை பலம், அரச பலம், அதி கார பலம், படை பலம் ஆகியவற்றினால் சைவத் தமிழர்களின் பண்டைய சமய, கலாசார, பாரம்பரிய அடையாளங்கள் பலவந்த மாகப் பறிக்கப்படுகின்றன. கோயில்கள் அழிக்கப்படுகின்றன.

இந்நிலையில் கன்னியா எனும் நம் பண்டைய பாரம்பரிய அடை யாளச் சின்னம் எம் கண்முன்னே பறிபோய்க் கொண்டிரு ப்பதை கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை. 7000 வருடங் களுக்கு முற்பட்ட இலக்கிய ஆதாரங்கள், 1000 வருடங்களுக்கு முற் பட்ட தொல்லியல் ஆதாரங்கள், 200 வருடங்களுக்கு முற்பட்ட வரலா ற்று அறிஞர்களில் ஆய்வு நூல்கள் ஆகியவை இருந்தும் எம் பாரம் பரிய கோயில்களும், அதன் அடையாளங்களும் அழிந்து கொண்டி ருக்கிறதே என என்னுள் ஏற்பட்ட ஆதங்கம், சொல்ல முடியாத வேதனை, மிகுந்த கோபம் ஆகியவை எல்லாம் ஒன்றாகத் திரண்டு ன்னியா-பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடை யாளம்  எனும் பெயரில் இங்கே நூல் வடிவில் பொங்கி எழுகிறது.

இந்நூலில் கன்னியா வெந்நீர் ஊற்றுகள் பற்றிய புராண வரலாறு, பண்டைய நூற்குறிப்புகள், வெந்நீர் ஊற்றுக்கள், இங்கி ருந்த கோயில்கள், கன்னியா மலையில் உள்ள சமாதி ஆகியவை தொடர்பான  ஐரோப்பிய அறிஞர்களின் ஆய்வுக் குறிப்புகள், இங்கு சிவன் கோயில் இருந்தமைக்கான தொல்பொருள் சின்னங்கள், பிள் ளையார் கோயிலின் சிதைவுகள், கடந்த நூற்றாண்டில் கன்னியா தொடர்பான முக்கிய விடயங்கள், இங்கிருந்த கோயில் அழிக்கப் பட்ட சம்பவங்கள் மற்றும் அண்மைக் காலமாக கன்னியாவில் இடம்பெற்று வரும் பெளத்த ஆக்கிரமிப்புகள் போன்ற விடயங்களை கிடைக்கக் கூடிய ஆதாரங்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படை யில் இந்நூலை எழுதியுள்ளேன்.இது கன்னியாவை மீட்டெடுக்க பெரும் கருவியாக அமையும் என நம்புகிறேன். 

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.



No comments:

Post a Comment