Wednesday, April 22, 2020

பண்டைய தென்னிலங்கையில் இருந்த மகா நாககுல இராச்சியத்தில் சிவவழிபாடு


பண்டைய தென்னிலங்கையில் இருந்த மகா நாககுல இராச்சியத்தில் சிவவழிபாடு 


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                       
NKS/148   22 April 2020

பண்டைய தென்னிலங்கையில் இருந்த மகா நாககுல இராச்சியத் தின் சுவடுகளைத் தேடிச் சென்றேன். 2300 வருடங்களுக்கு முன்பு மகாநாகன் எனும் நாகமன்னன் அமைத்த இரு இராச்சியங்களில் ஒன்றே மகாநாககுல எனும் இராச்சியமாகும்.

பராக்கிரமபாகுவின் தமிழ்த் தளபதியான ரக்கா கங்குகநாதன் என்பவன் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சுகலா எனும் அரசியிடம் இருந்து இந்த இராச்சியத்தைக் கைப்பற்றி சிலகாலம் ஆட்சி செய்து வந்தான் எனும் குறிப்பும் உள்ளது. எனவே பிற்காலத்தில் இது ரக்கா நுவர (ரக்கா நகரம் ) எனப் பெயர் பெற்றது. அதுவே பின்பு ரம்பா நுவர எனத் திரிபடைந்தது.

அம்பாந்தோட்டை நகரின் வடக்கில் 12 கி.மீ தூரத்தில் இந்த இராச்சி யத்தின் இடிபாடுகள் காணப்படுகின்றன. வன நதி எனும் வளவ கங்கை. கொஸ்வத்து ஆறு ஆகியவற்றால் சூழப்பட்ட ஓர் தீவின் நடுவில் 250 ஏக்கர் பரப்பளவில் இந்த பண்டைய நகரம் அமைந்து ள்ளது. இங்குள்ள பௌத்த விகாரையின் பின்பக்கம் இருக்கும் காட்டுப் பகுதியில் இதன் இடிபாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

நாகவழிபாட்டில் ஈடுபாடு கொண்ட மகாநாக மன்னனின் நகரில் நாக வழிபாட்டின் சுவடுகளைத் தேடிச் சென்றேன். அப்படிப்பட்ட சுவடுகள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை. ஆனால் அது சிவபூமி யாக இருந்தது.
  

இங்கிருந்த காட்டுப்பகுதியில் இருந்த இடிபாடுகளின் மத்தியில்..
மொத்தமாக 7  சிவலிங்கங்களைக் கண்டேன்.மிகப்பழமையான சிதைந்த லிங்கங்கள் மூன்று.பழமை வாய்ந்த தாரா லிங்கங்கள் மூன்று.பழமையான நாகலிங்கம் ஒன்று.பழமையான ஆவுடையார் ஒன்று. இவை எல்லாமே 1500 வருடங்களுக்கு முற்பட்டவை.

3000 ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் குறிப்பிட்ட சிவபூமியின் பண் டைய சுவடுகள் தென்னிலங்கையில் தான் உள்ளன. ஆம்.இதுதான் சிவபூமி.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்

இலங்கை 

No comments:

Post a Comment