Tuesday, April 21, 2020

சங்ககால பரிபாடலில் சிவன், திருமால், முருகன்

சங்ககால பரிபாடலில்  சிவன், திருமால், முருகன்

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                                NKS/141    19 April 2020



தமிழரின் ஆரம்பகால வரலாற் றையும், வழிபாட்டையும், பண்பாட் டையும் கூறும் நூல்களாக சங்க கால நூல்கள் விளங்குகின்றன.

சங்க நூல்கள் மொத்தம் 18. இவை இலகு தமிழிலும் உள்ளன. அனை த்தும் பாடல்களாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்டுள்ளன. அவற்றை அறிஞர்கள் இலகு தமிழில் அதன் சுவை மாறது உரையாக எழுதியுள் ளனர். பொறுமையாகப் படிக்க வேண்டும்.

அவற்றில் ஒன்றுதான் பரிபாடல். இதிலே மொத்தமாக 22 பாடல்கள் உள்ளன. விளக்க உரையுடன் நூல் அமைந்துள்ளது. பரிபாடலில் மொத்த மாக 70 பாடல்கள் முன்பு இருந்தன. இவற்றில் 48 பாடல்கள் அழிந்து விட்டன. மிகுதி 22 பாடல் கள்மட்டுமே கிடைத்துள்ளன.

இவற்றில் முருகன் பற்றி  9 பாடல்களும், திருமால் பற்றி  6 பாடல்க ளும், வைகை நதி பற்றி  7 பாடல்களும் அடங்கியுள்ளன. முருகன் பாடல்களில் சிவன் பற்றி  6  இடங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. பண்டைய தமிழர்கள் சிவன், திருமால், முருகன் ஆகிய தெய்வங் களை வழிபட்டுள்ளனர் என்பதற்கு பரிபாடல் ஓர் முக்கிய சான் றாகும்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்.
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment