Sunday, April 19, 2020

பொம்பரிப்பில் சிவன்மலை


பொம்பரிப்பில் சிவன்மலை


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/128      28 Dec 2019




இலங்கையின் மேற்குப் பகுதியில் உள்ள புத்தளம் மாவட்டம் பண்டைய காலம் முதல் இந்து சமயம் மேலோங்கிக் காணப்பட்ட பிரதேசமாகும். பொம்பரிப்பு, தப்போவ, முன்னேஸ்வரம், குதிரை மலை, உடப்பு, கற்பிட்டி போன்ற இடங்களில் பண்டைய காலம் முதல் காணப்படும் இந்து சமய சின்னங்கள் இக்கூற்றை உறுதி செய்கின்றன. அந்த வகையில் வில்பத்து காட்டில் உள்ள பொம்பரிப்பில் அமைந்துள்ள சிவன் மலையும் முக்கியத்துவம் பெறுகிறது. 
பொம்பரிப்பில் சிவ வழிபாடு நிலவிய சிவன்மலை

பொம்பரிப்பு பிரதேசத்திலே சிவவழிபாடு நிலவியமைக்கு இன்னு மோர் சான்றாக விளங்குவது சிவன்மலை என்னுமிடமாகும். இம் மலையில் சிவன் கோயில் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது பொம்பரிப்பின் வடகிழக்கில் உள்ள சின்ன விளச்சிக் குளத் திற்கும் பொம்பரிப்பிற்கும் இடையில் காணப்படும் தட்டையான மலைப்பாறையாகும். கொம்பன் குட்டி  ஆறு எனும் சிற்றாறின் குறுக்கே அணைக்கட்டப்பட்டு ஒர் சிறிய குளம் கட்டப்பட்டுள்ளது. இக்குளம் இன்று தூர்ந்து போய் காணப்படுகிறது. 

குளத்தின் அரு கில் சிவன் மலை அமைந்துள்ளது. இங்குள்ள சிவ னைத் தரிசிக்க பல முனிவர்கள் வருவதுண்டு. அப்படி வந்தவர்களில் ஒருவர் இம்மலை யில் தங்கி இருந்ததால் இம்மலை சிவனடியார் மலை என அழைக் கப்பட்டது. இதுவே காலப்போக்கில் சிவனடியார் கல் எனவும் பின்பு சிவனடியாகல எனவும் திரிபடைந்துள்ளது. இங்கி ருந்த குளம் சிவனடியார் வில்லுக்குளம் எனவும் பின்பு சிவனடியா வில எனவும் திரிபடைந்துள்ளது. சிவனடியார் கல்மலையில் ஒர் சிறிய நீர்ச்சுனை காணப்படுகிறது. இதன் அருகில் பழமை வாய்ந்த சிவன் கோயில் இருந்திருக்கலாம் என நம்பப் படுகிறது.

வைதூலிய மன்னன் மகாசேனன் பொம்பரிப்பில் அமைத்த குளம்



சிவனடியார் கல் மலைப்பாறையில் ஓர் கல்வெட்டு பொறிக்கப் பட்டுள்ளது. கி.பி. 1 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டில் வசபன் எனும் மன்னன் பற்றியும் இவனது ‘கலபஹன’ எனும் குளத்தின் மூலம் கிடைக்கும் வரி மஹன எனும் நகரில் வாழும் 50 குடும்பங் களுக்கு கொடுக்கப்பட வேண்டும் எனவும் கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளது. இக்குளம் சிவனடியார் கல்மலை அருகில் காணப்படும் பழைமை வாய்ந்த குளமாகும். இக்குளம் தற்போது ‘கரம்பைக் குளம்’ என அழைக்கப்படுகிறது.



கி.பி. 276-303 வரையான காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த மகாசேனன் ‘காலபசான’ எனும் குளத்தை அமைத்ததாக மகாவம் சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு வசப மன்னனால் கட்டப்பட்ட ‘கலபஹன’ எனும் குளமே பின்பு மகாசேனனால் புனரமைத்துக் கட்டப்பட்டுள்ளது. இதுவே மகாவம்சத்தில் ‘கால பசான’ குளம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாசேனன் எனும் மன்னன் வைதூலியம் எனும் சைவ வழிபாட்டில் ஈடுபாடுடையவனாக விளங்கினான். இலங்கையில் வைதூலிய சைவ சமயத்தைத் தீவிரமாக முன்னெடுத்த சைவத்துறவியான சங்கமித்தன் ஜெட்டதீசன் எனும் மன்னன் காலத்தில் இவனது பௌத்த மத கெடுபிடியின் காரணமாக சில காலம் சோழ நாட்டில் தங்கியிருந்தார். இக்காலகட்டத்தில் சோழ நாட்டோடு நெருங்கிய உறவு கொண்டி ருந்ததோடு சங்கமித்தனின் உற்ற நண்பனாகவும் மகாசேனன் விளங்கினான். ஜெட்டதீசனின் பின் அவனது தம்பி யான மகாட்சனன் ஆட்சி பீடமேறினான். இக்காலப்பகுதியில் சோழ நாட்டிலிருந்து சங்கமித்தனை இலங்கைக்கு அழைத்து அவரின் துணையுடன் சைவ வழிபாட்டை மேம்படுத்தினான். மகாசேனன் காலத்தில் வைதூலிய சமய நெறியும் மகாயான பௌத்தமும் முன் னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக மகா விகாரை உட்பட பல பௌத்த விகாரைகள் மகாசேனன் அழித்தான்.

பொம்பரிப்பில் சிவவழிபாடு செய்த தனசிவன்

கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களில் பொம்பரிப்புப் பகுதியில் சிவ வழிபாடு நிலவியமைக்கு இன்னுமோர் ஆதாரமும் உள்ளது. சத்தா தீசனின் இளையமகனான வலகம்பாகு மன்னன் தனது அண்ண னான கல்லாடநாகன் கொல்லப்பட்டதன் பின் கி.மு. 103 இல் அனுரா தபுரியின் மன்னனாக முடிசூடிக் கொண்டான். வலகம்பாகு ஆட்சி பீடமேறி 5 ஆவது மாதத்தில் பாண்டி நாட்டிலிருந்து படை எடுத்து வந்த ஏழு பாண்டிய இளவரசகர்கள் அநுராதபுரியைக் கைப்பற்றி இலங்கையை ஆட்சி செய்தனர். இவ்விளவரசர்களின் தலைவனான புலகத்தன் இலங்கையின் அரசனானான். இக்கால கட்டத்தில் வலக ம்பாகு தனது மனைவி சோமாதேவி, மகன் மகாநாகன், அண்ண னின் மனைவி அனுலா, அண்ணனின் மகன் மகாசூலிகன் ஆகியோ ரோடு அனுராதபுரத்தை விட்டு தப்பிச் சென்றான். போகும் வழியில் சோமாதேவி பாண்டிய படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டான். வலகம்பாகுவுடன் ஏனைய மூவரும் வெஸ்ஸகிரிய காட்டுக்குள் தப்பிச் சென்றனர்.

வெஸ்ஸகிரியவின் மேற்குப் பக்கமாக நீண்ட தூரம் பயணம் செய்து கல்ஹேகட என்னுமிடத்தில் தஞ்சம் புகுந்தனர். இப்பகுதியின் தலை வனான தனசிவன் எனும் சிவ வழிபாட்டை மேற்கொள்ளும் சைவன் இப்பகுதியை பரிபாலித்து வந்தான். வலகம்பாகுவின் அண்ணனின் நண்பனான தனசிவன் இவர்களைப் பாதுகாத்து வந்தான். பாண்டி யப் படைகள் வலகம்பாகுவைத் தீவிரமாகத் தேடி வரவே வலகம் பாகு தனது குடும்பத்தவர்களை தனசிவனிடம் ஒப்படைத்து விட்டு தென்னிலங்கைக்குத் தப்பி ஒடினான். 14 வருடங்கள் தனசிவனின் பாதுகாப்பில் வலகம்பாகுவின் குடும்பத்தவர் இருந்தனர்.

தனசிவன் சிவபக்தன் என்பதன் மூலம் அவனது இடமான கல்ஹே கடவில் சிவவழிபாடு நிலவியதோடு, இங்கு சிவன் கோயிலும் இருந் திருக்கும் என்பதில் ஐயமில்லை. தனசிவனின் கல்ஹேகட பொம்ப ரிப்பின் தென்கிழக்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் பொன்பரப்பி நதிக்கரையில் உள்ள கல்கே என்னுமிடமாகும். 2000 வருடங்களுக்கு முன் தனசிவனின் பரிபாலனத்தின் கீழ் இருந்த இடம் இதுவே என்பத ற்கு ஓர் முக்கிய சான்றாக விளங்குவது இங்கு பொறிக்கப் பட்டிருக் கும் பிராமிக் கல்வெட்டாகும்.

தனசிவனின் கிராமத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு

கி.மு. 1ஆம் நூற்றாண்டிற்குரிய இக்கல்வெட்டில் ‘சிதம் கடஹலக வவி ஹமிக வொகர நாகக அனுலயக மாணிக்கர..... தினி ஜனன லேன’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இது ‘உயர்ந்த அந்தஸ்துடைய மூன்று பேர்களான சட்ட நிபுணர் நாகன், தலைவன் கல்லாடனின் அனுலா, இரத்தினக்கற்களை பட்டை தீட்டும்... ஆகியோரின் குகை’ எனப் பொருள்படுகிறது. இக்கல்வெட்டில் வலகம்பாகுவின் மக னான மகாநாகனை நாகன் எனவும் அண்ணனின் மனைவி அனு லாவை தலைவன் கல்லாடனின் அனுலா எனவும் அண்ணனின் மகனின் பெயர் பொறிக்கப்பட்ட பகுதி வாசிக்க முடியாதபடி எழுத் துகள் சிதைவடைந்தும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு Inscription of Ceylon பாகம் 1” எனும் நூலில் பேராசிரியர் பரண வித்தாரணவால் கல்வெட்டு இலக்கம் 1122 ஆக பதிவு செய்யப் பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.

No comments:

Post a Comment