Friday, April 17, 2020

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த தோட்டத் தொழிலாளர்களால் கட்டப்பட்ட முதலாவது கோயில்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த தோட்டத் தொழிலாளர்களால் கட்டப்பட்ட முதலாவது கோயில்

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/109     14 Aug 2017



இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த தோட்டத் தொழிலாளர்களால் கட்டப்பட்ட முதலாவது கோயிலைத் தேடிச் சென்றபோது....
இக்கோயில் மன்னார் மாவட்டத்தின் தெற்கில் அருவி ஆறு கடலில் கலக்கும் சங்கமத்தின் அருகில் உள்ளது. மாரியம்மனுக்குரிய இக்கோயிலை மிகுந்த சிரமத்தின் பின்பு  கண்டு பிடித்தோம்.

 



கோயில் இருந்த இடம் கூட அடையாளம் காண முடியாத வகையில் பற்றைகளால் மூடப்பட்டு மிகவும் அவல நிலையில் இருந்த இக்கோயிலைப் பார்த்தவுடன் வேதனையாக இருந்தது. சுமார் 150 வருட பாரம்பரியமிக்கதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான இக்கோயில் உடனடியாக புனரமைக்கப்பட வேண்டும்.

முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களைக் கொண்ட அரிப்பு இக்கிராமத்தில் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது பூஜைகள் நடக்க அயலூரில் இருக்கும்
ஓர் ஐயரை அமர்த்த வேண்டும்.

இந்துக்கள், இந்து சமய அமைப்புக்கள் இந்தக் கோயிலைப் புனரமைத்து இவ்விடத்தில் அழிந்து போய்க் கொண்டிருக்கும் சைவ பாரம்ம்பரியத்தை காப்பற்ற முன் வருவார்களா?

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.





No comments:

Post a Comment