Saturday, April 18, 2020

எமது பண்டைய வரலாற்று சின்னங்களையும், அடையாளங்களையும் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்


எமது பண்டைய வரலாற்று சின்னங்களையும், அடையாளங்களையும் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/125    19 Dec 2019



இலங்கைத் தமிழ் மக்களே! 
பக்தர்களே! ஆலய நிர்வாகிகளே! 
உங்களுக்கு ஓர் வேண்டுகோள்!

பண்டைய தமிழர்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், கலா சாரத்தையும் அறிந்து கொள்வதற்கு, சான்றுகளாக விளங்கு பவை கல்வெட்டுக்களும், தொல்பொருள் சின்னங்களும், பண்டைய நூல் களுமே. இவற்றில் கல்வெட்டுக்களும், தொல்பொருள் சின்னங்க ளும் மிகமுக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இவ ற்றை பாதுகாத்து எம் வரலாற்றைப் பறைசாற்றும் கருவூலங்களாக விளங் குபவை எமது பண்டைய கோயில்களே.

எமது கோயில்களில் காணப்படும் தெய்வச் சிலைகள், கல் வெட்டு கள், செப்பேடுகள், கற்தூண்கள், சிற்பங்கள், ஓவியங்கள், பண்டைய நாணயங்கள் போன்றவையே எமது பண்டைய வரலாற்றைக் கூறும் அரிய பொக்கிஷங்களாகும்.இவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண் டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

நம் கோயில்களில் உள்ள சிறிய கருங்கல் துண்டு கூட நமது வரலாற் றைக் கூறும் பொக்கிஷங்களில் ஒன்றாகவே காணப் படுகின்றது. எனவே தயவுசெய்து இவற்றை குப்பைகளில் போட வேண்டாம். மண்ணிற்குள் புதைத்து அதன் மீது மாபிள், கொங்ரீட், சீமெந்து இட்டு மறைக்க வேண்டாம்.






















இவற்றை உங்கள் கோயில் வளவிற்குள் ஓர் சீமெந்து மேடை யமைத்து அதில் நட்டு வையுங்கள். உங்கள் சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் இதன் காலத்தையும், விபரத்தையும் ஒரு பெயர்ப் பலகையில் எழுதி வையுங்கள். இதுவே நீங்கள் எமது வரலா ற்றுச் சின்னங்களையும், அடையாளங்க ளையும்  பாதுகாப் பதற்கு  செய்யவேண்டிய கடமையாகும். மிக்க நன்றி. 

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 

No comments:

Post a Comment