Friday, April 17, 2020

சித்தர் போகர் தங்கிச் சென்ற போக சித்தர் மலை

சித்தர் போகர் தங்கிச் சென்ற 

போக சித்தர் மலை 

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/116    9 April 2018





இலங்கையின் கிழக்கில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் தென் எல்லையாக  கும்புக்கன் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின்  அருகில் கூமுனை எனும் இடம் உள்ளது.  கூமுனை அருகில் சித்தர் போகர் தங்கிச் சென்ற  மலைப்பாறை அமைந்துள்ளது.
இம்மலைக்குன்றில் உள்ள கற்குகைகளில் 7 பிராமிக் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    

பொ.ஆ.மு 2 ஆம் நூற்றாண்டில் கஜரகம இராச்சியத்தை ஆட்சி செய்த பாண்டிய சத்திரிய மன்னர்களால் பொறிக்கப்பட்ட 3 கல்வெட்டுக்களும் இங்கு காணப்படுகின்றன. இதில் சுவாஸ்திகா சின்னங்களும், மீன் வடிவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.



































பொ.ஆ.2 ஆம் நூற்றாண்டில் கதிர்காமத்திற்கு தீர்த்த யாத்திரை வந்த சித்தர் போகர் இம்மலையில் தங்கிச் சென்றதால் இம்மலைக்குன்று போக சித்தர் மலை எனப் பெயர் பெற்றது. அதுவே பின்பு போவத்தகல என மருவியதாகக் கூறப்படுகிறது.


என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை  

No comments:

Post a Comment