Tuesday, April 21, 2020

தம்பதெனியாவில் இருந்த புராதன சிவன் கோயில்

தம்பதெனியாவில் இருந்த  புராதன   சிவன் கோயில்

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                               NKS/142    20 April 2020





இலங்கையின் மூன்றாவது தலைநகரமாக விளங்கிய தம்பதெனி யாவில் பண்டைய காலத்தில் ஓர் சிவன் கோயில் அமைந்திருந்தது. தம்பதெனியா இராச்சியம் 13 ஆம் நூற்றாண்டில் (பொ.ஆ 1220 ஆம் ஆண்டு) தோற்றம் பெற்றது. இந்த தலைநகரைத் தோற்றுவித்த 3ஆம் விஜயபாகு பௌத்த வழிபாட்டில் மட்டுமல்லாது சிவ வழிபாடு செய் தவனாகவும் இருக்க வேண்டும்.

கலிங்க மாகோனின் படையெடுப்பால் இவன் பொலநறுவையில் இருந்து தப்பிவந்து தம்பதெனியாவில் தனது புதிய தலைநகரை அமைத்தான். அப்போது மலையில் கோட்டையையும், மலை அடி வாரத்தில் வழிபாட்டிடங்களையும் அமைத்துள்ளான். இவற்றில் பௌத்த விகாரை மற்றும் சிவன் கோயில் ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. பிற்காலத்தில் சிவன் கோயில் தரை மட்டமாக அழிக்கப் பட்டு பௌத்த விகாரை மட்டும் பாதுகாக்கப் பட்டுள்ளது.













பண்டைய சிவன் கோயிலின் எச்சங்கள் சில இன்றும் இங்கே உள் ளன. சிவலிங்கம் ஒன்று மற்றும் அடியார்கள் வணங்கும் சிவலிங்கம் என இரண்டு சிற்பங்கள் உள்ளன. சிவலிங்க உருவங்கள் இரண்டும் புடைப்புச் சிற்பங்களாகும்.  இவற்றில் ஒன்று இரண்டாக உடைந்து பொருத்தப்பட்டுள்ளது.




















இவையிரண்டைத் தவிர ஓர் இந்து தெய்வச்சிலை யையும்  இங்கு  கண் டேன். இந்து தெய்வச் சிலை மூன்று துண்டு களாக உடைந்து ள்ளது. முகத்தில் மூக்கு, வாய், நாடி  போன்றவை உடைந்து விட்டன. இவற்றை சீமேந்தில் செப்பனிட்டுள்ளார்கள். இது நான்கு கைகளை உடைய ஆண் தெய்வத் தின் சிலை. இரண்டு கைகள் முற்றாக உடை ந்து விட்டன. ஏனைய இரண்டு கைகளும் முழங்கையோடு உடைந்து ள்ளமையை அவதானித்தேன்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்.
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment