Tuesday, April 21, 2020

தென்னிலங்கையில் சந்தனகாமம், சித்தர் வில்லு பகுதிகளில் சிவ வழிபாட்டின் சுவடுகள்

தென்னிலங்கையில் சந்தனகாமம், சித்தர் வில்லு பகுதிகளில் சிவ வழிபாட்டின் சுவடுகள்

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                               NKS/143    20 April 2020



தென்னிலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய வம்சத் தைச் சேர்ந்த கஜரகாம சத்திரிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத் தில், சந்தனகாமம் எனும் இராச்சியமும் பாண்டிய வம்சத்தைச் சேர் ந்த சந்தனகாம சத்திரியர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இவ்விரு இராச்சியங்களின் மன்னர்கள் இருவரும் போதிமரம் நடும் விழா விற்கு தேவநம்பிய தீசனால் அனுராதபுரிக்கு அழைக்கப்பட்டனர்.
இக்காலப்பகுதியில் சந்தனகாம இராச்சியத்தில் சித்தர்கள் வாழ்ந்த ஓர் பகுதி இருந்தது. இது சித்தர் வில்லு என அழைக்கப்பட்டது. பிற் காலத்தில் அது சித்தரவில என மருவி விட்டது.
தேவநம்பியதீசனின் தம்பியான மகாநாகன் இப்பகுதியிலேயே தனது இராச்சியத்தை நிறுவி நாக வழிபாட்டையும், சிவ வழிபாட் டையும் கடைப்பிடித்து வந்தான். மகாநாகனின் பேரனான கோத்தா பயன் சத்திரிய மன்னர்களை அழித்து இந்த இராச்சியத்தை முழு மையாக தனதாக்கிக் கொண்டான். சந்தனகாமம் பின்பு சந்தகிரி காமம் என அழைக்கப்பட்டது.
இப்பகுதியில் சித்தர் வில்லு, சந்தனகாமம் ஆகிய பகுதிகளில் சித்தர் களும், சந்தனகாம சத்திரியர்களும், மகாநாகனும் வழிபட்ட சிவ னின் சுவடுகளையும், நாக வழிபாட்டின் சுவடுகளையும் தேடி பண் டைய சந்தனகாம இராச்சியம் அமைந்திருந்த பகுதிக்குச் சென் றேன். சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மூன்று பகுதிகளாக இதன் இடி பாடுகள் காணப்பட்டன.
தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள திஸ்ஸ மகாராமையின் அருகில், திஸ்ஸ வாவி குளத்தின் தெற்கில்  சித்தர் வில்லு , சந்தனகாமம் ஆகிய இடங்கள் அமைந்துள்ளன.
இங்கு நாக வழிபாட்டின் சுவடுகள் கிடைக்கவில்லை. ஆனால் சிவ வழிபாட்டின்  சுவடுகளைக் கண்டேன். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட எட்டுப்பட்டை தாரலிங்கம் ஒன்றைக் கண்டேன். இது இர ண்டு துண்டுகளாக உடைந்து அவை பின்பு பொருத்தி வைக்கப் பட்டுள்ளன. நம் கோயில் கருவறையில் உள்ள பண்டைய கோமு கிகள் இரண்டும் அங்கே காணப்பட்டன.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்.
இலங்கை

No comments:

Post a Comment