அனுராதபுரத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி கோயிலும், சிவன் கோயிலும்
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/108 20 July 2017
அனுராதபுரம் புராதன நகரில் சோழர் காலத்திற்கு முன்பு கட்டப்பட்ட, சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி கோயிலின் இடிபாடுகள் காணப்படுகின்றன..
அனுராதபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த பௌத்த வழிபாட்டிடங்கள் புனரமைக்கப்பட்டு மக்கள் வழிபடும் வண்ணம் வகை செய்யப்படும் அதே சமயம், இந்து சமய வழிபாட்டிடங்கள் இவ்வாறு கவனிப்பாரற்று காடு மண்டிக் கிடப்பது கவலைக்குரியதே.
இலங்கையில் கிடைத்த இந்து தெய்வச் சிலைகளில் மிகுந்த அழகும், வனப்பும் உடையது இங்கு கிடைத்த சிலையே.
அனுராதபுரத்தின் வடக்கு பகுதியில் உள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலின் சிதைவுகளும் காணப்படுகின்றன.
அனுராதபுரத்தின் வடக்கு பகுதியில் உள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் இடிபாடுகள்
பல மணிநேர தேடலின் பின் சிவாலயத்தின் தூண்கள், படிகள், நாகக்கல், தீர்த்தக்கேணி ஆகியவற்றின் இடிபாடுகளைக் காணக் கிடைத்தது.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.
No comments:
Post a Comment