Wednesday, April 22, 2020

நீர்கொழும்பில் போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்பட்ட நஞ்சுண்டார் சிவன் கோயில்

நீர்கொழும்பில் போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்பட்ட நஞ்சுண்டார் சிவன் கோயில்


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/146   22 April 2020


கோயிலின் கற்தூண்களைக் கொண்டு கட்டப்பட்ட நீர்கொழும்பு கோட்டை

சிவ பூமியின் சுவடுகளைத் தேடி நான் சென்ற இடங்களில் ஒன்று தான் நீர்கொழும்பு. இங்கு போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பு பல கோயில்கள் இருந்தமை பற்றிய குறிப்புகள் சில கிடைத்தன. இக்குறிப்புகளின் படி இங்கு ஓர் சிவன் கோயிலும், அம்மன் கோயிலும் பண்டைய காலத்தில் இருந்துள்ளன. இவை போர்த்துக்கேயரால் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்ட இக்கோயில்கள்  நஞ்சுண்டார் சிவன் கோயில் எனவும், காமாட்சி அம்மன் கோயில் எனவும் பெயர் பெற்று விளங்கியுள்ளன. இக்கோயில்களின் சுவடுகளைத் தேடி  நீர்கொழும்புக்குச் சென்றேன். 

தற்போது நீர்கொழும்பில் உள்ள கடல் வீதியில் பல கோயில்கள் காணப்படுகின்றன. ஆனால் இவற்றிற்கு முற்பட்ட கால வரலாற்றைக் கொண்ட கோயில்களாக சிவன் மற்றும் அம்மன் கோயில்கள் விளங்கியுள்ளன. அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது, அங்கு காமாட்சி அம்மன் கோயில் அமைந்திருந்த இடத்தை அடையாளம் கண்டேன். 

நஞ்சுண்டார் கோயில் அமைந்திருந்த நஞ்சுண்டான் கரை

நஞ்சுண்டார் சிவன் கோயில் நஞ்சுண்டான் கரை  என்னுமிடத்தில்  அமைந்திருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. எனவே நீர்கொழும்பில் நஞ்சுண்டான் கரை என்னுமிடத்தைத் தேடினேன். அப்படி ஓர் இடம் இப்போது இல்லை எனத் தெரிந்தது. ஆனால் முன்னக்கரை என்றோர் இடம் உள்ளதாக அங்குள்ள மக்கள் கூறினார். பண்டைய காலத்தில் இருந்த நஞ்சுண்டான் கரையே தற்போது முன்னக்கரையாக திரிபடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை உறுதி செய்து கொளவதற்காக  முன்னக்கரைக்குச் சென்றேன். 

முன்னக்கரை என்னுமிடம் இரண்டு தீவுகளைக் கொண்ட பிரதேசமாகும்.  இது நீர்கொழும்புக் கோட்டையின் தெற்கில்,  களப்பு நீர் கடலில் கலக்கும் சங்கமத்தின் அருகில் உள்ளது. வடக்கு தெற்காக ஒடுங்கிய, நீளமான இத்தீவுகளில் முதலாவது தீவு 800  மீற்றர் நீளமும்,  600 மீற்றர் அகலமும் கொண்டது. இத்தீவின் தெற்கில் அமைந்துள்ள இரண்டாவது தீவு 800 நீளமும்,  300 மீற்றர் அகலமும் கொண்ட சிறிய தீவாகும். இவ்விரண்டு தீவுகளிலும் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் காணப் படுகின்றன. முதலாவது தீவில் காலத்துக்குக் காலம் பல  தெய்வச் சிலைகளும், சிவாலயச் சின்னங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே முதலாவது தீவில் தேவாலயம் அமைந்திருக்கும் இடத்தின் அருகில் பண்டைய நஞ்சுண்டார் சிவன் கோயில் இருந்துள்ளது என்பதை உறுதி செய்து கொண்டேன்.

நீர்களப்பு - நீர்கொழும்பு – நிகம்பு

நீர்கொழும்பு கம்பஹா  மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரமாகும். இம்மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு கடல் முகப்புத் தள நகரம் நீர்கொழும்பு என்பது குறிப்பிடத்தக்கது.  பொ.ஆ 14 ஆம் நூற்றாண்டில் ஓர் துறைப்பட்டினமாக விளங் கிய நீர்கொழும்பு நகரில், இக்காலப்பகுதியில் பிரசித்தி பெற்று விள ங்கிய இரு இந்து ஆலயங்களில் ஒன்றே நஞ்சுண்டார் சிவன் கோயி லாகும். பொ.ஆ. 14 ஆம் நூற்றாண்டில், இப்பகுதி யாழ்ப்பாண ஆரிய ச்சக்கரவர்த்தி களின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில், நஞ்சுண்டார் சிவன் கோயில் கட்டப்பட்டதாகத் தெரிய வருகிறது.

நீர்கொழும்பு பெரிய கடல் நீரேரியைக் கொண்ட பிரதேசமா கும். இதனால் இது “நீர் களப்பு” என அழைக்கப்பட்டு வந்தது. இதுவே போர்த்துக்கேயர் காலத்தில் நீர்கொழும்பு என மருவி விட்டது. போர் த்துக்கேயர் இப்பெயரே “நிகம்பு” என உச்சரித்து வந்தனர். இன்றும் ஆங்கிலத்தில் நிகம்பு என்றே உச்சரிக்கப் படுகிறது. இப்பெயர்  வரக் காரணமான நீர்கொழும்பு களப்பு வடக்கு தெற்காக சுமார் 12 கி.மீ. நீளத்தையும் 4 கி.மீ. அகலத்தையும் கொண்ட உப்பு நீர் வாவியாகும். இக்கடல் நீர் ஏரி பெருங்கடலுடன் இணையும் இடத்தின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள இரண்டு முனைகளும் உள்ள பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்கின. இந்து சமுத்திரத்திலிருந்து வரும் கப்ப ல்களும், படகுகளும் கடல் நீரேரிக்குள் நுழையும் வாயிலாக இருந்த இந்த சிறிய நீர்ப்பரப்பின் வடக்கிலும், தெற்கிலும் இருந்த நிலப்பரப் பில் தமிழ் மக்கள் பெருமளவில் குடியேறினர்.
தென்பகுதி ஒடுங்கிய நிலப்பரப்புடன் வடக்குத் தெற்காக 12 கி.மீ.  நீளத்தையும், ஒரு கி.மீற்றருக்கும் குறைவான அகலத்தையும் கொண்டதாகும். இந்நிலப்பரப்பின் மேற்கில் இந்து சமுத்திரமும், கிழக்கில் நீர்கொழும்பு களப்பும், தெற்கில் பமுனுகம எனும் கிராமமும் அமைந்துள்ளது. கடல் நீர் ஏரியின் வடபகுதி பெருநிலப் பரப்புடன் தொடர்பு பட்டிருந்தது. அத்துடன் நுழை வாயிலாகவும் அமைந்திருந்த படியால் இப்பகுதியே நீர்களப்பு என்ற பெயருடன் துறைப்பட்டினமாக உருவானது.















யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்தியின் கோட்டை
     பொ.ஆ. 1341 இல் இலங்கையின் தென்பகுதியில் உருவான கம் பளை இராச்சியத்திற்குட்பட்ட பகுதியாக அக்காலத்தில் நீர்கொழு ம்பு விளங்கியது. நீர்கொழும்பு உட்பட கம்பளை இராச்சியத்திற்குட் பட்ட மாயரட்டையின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளை யாழ்ப்பாண மன்னனான சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி கைப்பற்றினான். இக்கா லப்பகுதியில் ஆரியச் சக்கரவர்த்தியின் கோட்டை ஒன்றும் நீர்கொ ழும்பில் கட்டப்பட்டது. இக்கோட்டையை பின்பு போர்த்துகேயர், ஒல் லாந்தர் ஆகியோர்  கைப்பற்றி புனரமைத்தனர். ஆரியச் சக்கரவர்த் தியால் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்காக கம்பளை மன்னனான         3 ஆம் விக்கிரமபாகு (பொ.ஆ. 1357 -1374) சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி க்கு திறை செலுத்தி வந்தான்.
 ஆரியச் சக்கரவர்த்தி காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில்
இக்காலப்பகுதியில் தான் நீர்கொழும்பில் பல இந்துக்  கோயில் கள் ஸ்தாபிக்கப்பட்டன. இவற்றில் ஒன்றே நஞ்சுண்டார் சிவன் கோயிலாகும். இக்காலப்பகுதியில் நீர்கொழும்பு கடல் நீரேரியைச் சுற்றியிருந்த இடங்களில் இந்துக்கள் பெருமளவில் வாழ்ந்து வந்த னர். ஏரியின் தென்மேற்குக்  கரையில் பிரமணகாமம் எனும் பிராம ணர் குடியிருப்பு உருவானது. இதுவே தற்போது பமுனுகம என அழை க்கப்படுகிறது. தென்கிழக்கில் சந்நியாசிகளுக்கும், துறவிகளுக்கு மான மடாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது. ஏரி கடலில் கலக்கும் நுழைவாயிலின் தெற்கில் நஞ்சுண்டார் சிவன்கோயிலும், வடக்குப் பகுதியில் காமாட்சி அம்மன் கோயிலும் அமைக்கப்பட்டன. இவை யாவும்  14 ஆம், 15 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் நிலவிய சைவ  சமய வழிபாட்டின் உன்னத நிலைக்குச் சான்றாக அமைகின்றன.
இலங்கையின் தென்பகுதித் தலைநகரம் கம்பளையிலிருந்து கோட்டை ஜயவர்த்தனபுரத்திற்கு மாறியபோது 6 ஆம் பராக்கிரம பாகு  கோட்டை இராச்சியத்தின் மன்னனானான். இவனது காலத்தில் தான் நீர்கொழும்புப் பிரதேசம் சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியிடமிருந்து மீட்கப்பட்டது. இருப்பினும் இங்கிருந்த ஆலயங்கள் யாவும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன.           6 ஆம் பராக்கிரமபாகு காலத்தில் கோட்டை இராச்சியத்தில் மேலும் பல இந்துக் கோயில்கள் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












ஆலயத்தின் தூண்களைக் கொண்டு கட்டப்பட்ட கோட்டை
பொ.ஆ. 1505 இல் இலங்கையின் மேற்குக்  கரையோரத்தை வந் தடைந்த போர்த்துக்கேயர் முதல் மூச்சில் கைப்பற்றிய மேற்குக்  கரையோர நகரங்களில் நீர்கொழும்பும் ஒன்றாகும். நீர்கொழும் பைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இங்கு பிரசித்தி பெற்று விளங் கிய நஞ்சுண்டார் சிவன் கோயிலையும், காமாட்சி அம்மன் கோயி லையும் இடித்துத் தரைமட்டமாக்கியதோடு, இவற்றின் கற் தூண் களைக் கொண்டு ஓர் கோட்டையையும் கட்டினர். பொ.ஆ. 1640 இல் ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடமிருந்து நீர்கொழும்பைக் கைப்பற் றினாலும் மீண்டும்  இவ்விடத்தை போர்த்துக்கேயரிடம் இழந்து, பின்பு 1644 இல் மீண்டும் கைப்பற்றிய போது இக்கோட்டை அழிக்கப் பட்டது. 

பின்பு ஒல்லாந்தர் தமது பலம் வாய்ந்த கோட்டையை இங்கே கட்டியதோடு, இதனுள்ளே பெரிய கறுவாப்பட்டை களஞ்சியத்தை யும் கட்டினர். அன்றுமுதல், இக்கோட்டை “கறுவாக்கோட்டை” என அழைக்கப்பட்டது. 1796 இல் கறுவாக் கோட்டை ஆங்கிலேயர் வசமா னது. அன்றுமுதல் இக்கோட்டை ஓர் சிறைச்சாலையாகப்  பயன்படு த்தப்பட்டது. இன்றும் சிறைச்சாலை இக்கோட்டையினுள்ளே அமை ந்துள்ளது. கோட்டையின் எஞ்சிய பகுதிகளாக இதன் ஆர்ச் வடிவி லான நுழைவாயிலும், மணிக்கூட்டு கோபுரமும் இவற்றின் முன்பாக உள்ள மதிற்சுவருமே தற்போது காணப்படுகின்றன. இவை தொல் பொருட் திணைக்களத்தின் பாதுகாக்கப்பட்ட தொல்பொருட் சின்ன ங்களாக விளங்கின்றன.

பாதிரியார் குவைரோசின் குறிப்புகள்
பொ.ஆ. 1575 ஆம் ஆண்டளவில் நஞ்சுண்டார் கோயிலும் காமா ட்சி அம்மன் கோயிலும் இடிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. போர் த்துக்கேய பாதிரியாரான குவைரோஸ் அவர்கள் தான் எழுதிய குறி ப்பில் இவ்வாலயங்கள் இடிக்கப்பட்டமை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இங்கிருந்து இருபெரும் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டதாகவும், இவை இங்கிருந்த மக்களால் சிறந்த முறையில் பூஜிக்கப்பட்டு வந்த தாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்புகள் மூலமே நீர் கொழும்பில் இரண்டு பெரிய கோயில்கள் இருந்தமை பற்றித்      தெரிய வந்தது.
போர்த்துக்கேயர் வருகைக்கு முன்பு முழுமையாக இந்து மக் களைக் கொண்ட நீர்கொழும்பு நகரம் தற்போது கிறிஸ்தவர்களை அதிகளவில் கொண்டுள்ள ஓர் நகரமாகவும், பல கிறிஸ்தவ தேவால யங்களை உடைய நகரமாகவும் விளங்குகிறது. இதன் காரணமாக இங்கு வரும் மேல்நாட்டவர்  இந்நகரை “லிட்டில் ரோம்” (குட்டி ரோமா புரி) என அழைக்கின்றனர்.

இந்திரஜித் தவம் புரிந்த நிகும்பலையில் சிவலிங்கக்  கோயில்

இராமாயண காலத்துடன் நீர்கொழும்பு பிரதேசம் தொடர்புடை யதாகக் காணப்படுகிறது. இலங்கையின் மிகப் பழைமை  வாய்ந்த இடங்களில் ஒன்றாக நீர்கொழும்புப் பகுதி விளங்குகிறது. இலங்கை யின் மன்னனான இராவணனின் மகன் இந்திரஜித் உத்தியாவனத் தில் தவம் புரிந்து சிவனின் அருளைப் பெற்றதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்திரஜித் தவம் புரிந்த உத்தியாவனம் “நிகும் பலை” என்ற பெயருடன் விளங்கியது. இராவணன் காலத்தில் இரு ந்த நிகும்பலை தான் இன்றைய நீர்கொழும்பு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீர்கொழும்பு  ஐரோப்பியர்களால் “நிகம்பு” என அழைக்கப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தந்தை இராவண னின் வேண்டுகோளின் பேரில் இலங்கையின் பல பாகங்களிலும் 108 சிவலிங்கங்களை இந்திரஜித் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக  நூல்கள் கூறுகின்றன. இந்த 108 சிவலிங்கங்களில் ஒன்று நிச்சய மாக நிகும்பலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும் என வும் கூறப்படுகிறது. இதன்படி மிகப்பழைமை வாய்ந்த சிவலிங்கக் கோயில்களில் ஒன்று நிகும்பலை எனும் நீர்கொழும்பில் அமைந்திரு ந்தது என நம்பக் கூடியதாக உள்ளது.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்.
இலங்கை

No comments:

Post a Comment