Friday, April 17, 2020

இராவணனின் உடல் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் யகங்கல மலை


இராவணனின் உடல் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் யகங்கல மலை


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/111     2 Dec 2017





இலங்கையில் பதுளை மாவட்டத்தில் யகங்கல எனும் மலை உள்ளது.
இது யாகக்கல் என்பதன் திரிபாகும்.

இராம இராவண யுத்தத்தின் போது இந்திரஜித் இங்குதான் நிகும்பலா யாகம் நடத்தியதாகவும், இதனால் இவ்விடம் யாகக்கல் மலை எனப் பெயர் பெற்றதாகவும், அதுவே சிங்கள மொழியில் யகங்கல எனத் திரிபடைந்ததாகவும் கூறப்படுகிறது,

இராவணன் போரில் தாக்கப்பட்டு குற்றுயிராய் இருந்த போது அசுர குலத்தவர்கள் அவனை கொண்டு வந்து இம்மலையில் உள்ள குகையில் வைத்து அபூர்வ மூலிகை மருத்துவத்தின் மூலம் அவனை உயிர்ப்பிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.



பின்பு இராவணனின் இறந்த உடல் இங்கேயே வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியில் உள்ள மக்கள் இராவணனின் உடல் இன்னும் இங்கு இருப்பதாக நம்புகின்றனர்.

ஆனால்  இராவணனின் உடல் இங்கு இல்லை என்பதே உண்மையாகும். ஆனால் சில இந்திய ஊடகங்கள் இராமாயண சுவடுகளை இலங்கையில் ஆராய்வதாகக் கூறி, அதிக ஆர்வத்தினால், அதீத கற்பனையில் இராவணின் உடல் இதுதான் என ஓர் யூ டியூப் காணொளியை பதிவேற்றம் செய்துள்ளனர். ஆனால் இது உண்மையல்ல.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.

No comments:

Post a Comment