கற்பிட்டி கோயில் குடாவில் இருந்த புராதன அம்மன் கோயில் எங்கே?
என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/131 13 Jan 2020
புத்தளம் மாவட்டத்தில் உள்ள கற்பிட்டி முகத்துவாரம் தீவில் கோயில் குடா என்னுமிடத்தில் பண்டைய காலத்தில் ஓர் அம்மன் கோயில் இருந்தது. இந்தக் கோயில் சுமார் 500 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டது.
இவ்விடத்தின் வடபகுதியில் உள்ள காரைதீவு சிவன் கோயிலுக்கு இந்தியாவிலிருந்து வந்த சைவ மக்களால் இக்கோயில் ஆரம்பிக் கப்பட்டது. சுமார் 100 வருடங்களாக மக்கள் இவ்விடத்தை விட்டு இடம் பெயர்ந்த நிலையில் இவ்வம்மன் கோயில் பராமரிப்பின்றி அழிந்து போய் விட்டது.
இக்கோயில் இருந்த இடத்தைக் கண்டு பிடிக்க வேண்டும் என ஆவல் கொண்டேன். கற்பிட்டியில் உள்ள நண்பர்கள் சிலர் என் னோடு வந்து அக்கோயிலைக் கண்டு பிடிக்க உதவுவதாகக் கூறினார்.
இக்கோயிலின் சிதைவுகளைத் தேடி முகத்துவாரம் தீவிற்கு படகில் சென்று, அங்கிருந்து ட்ராக்டர் வண்டி மூலம் மக்கள் இல்லாத காட்டு க்கும், அதன் அருகில் உள்ள களப்பிற்கும் சென்று கோயில் இருந்த இடத்தைத் தேடினோம். அன்று காடாக இருந்த இடங்கள் பலவும் தற்போது தனியாருக்குச் சொந்தமான இடங்களாக மாறியிருந்தன. கம்பி வெளிகள் போட்டு அடைக்கப் பட்டிருந்தன.
பற்றைகளும், மணலும், காடும் நிறைந்த இக்காணிகள் எல்லாம் எதிர்காலத்தில் உல்லாச விடுதிகள் அமைக்கும் திட்டத்துடன் சில செல்வந்தர்களால் வாங்கப்பட்டுள்ளதாக நண்பர்கள் கூறினார்.
சுமார் 2 மணித்தியாலங்கள் காட்டிலும், களப்பு கரையோரங்களி லும், பற்றைகளிலும் தேடியும் கோயிலின் சிதைவுகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கோயில் இருந்த இடத்தை ஓரளவு அடையா ளம் காண முடிந்தது. இருப்பினும் கோயிலின் சிதைவுகளைக்கண்டு பிடிக்க முடியவில்லை. கோயில் இருந்த மரத்தடியை அடையாளம் காண முடிந்தது. இவ்விடங்களை விலைக்கு வாங்கி வேலி அடைத்து ள்ளவர்கள் கோயிலின் சிதைவுகளையும் அழித்திருக்கலாம்.
இந்தப் பயணத்தில் எனக்கு உதவியாக கற்பிட்டி ஆசிரியர் சுப்ர மணியம், நண்பர் ரவி, நண்பர் பத்மநாதன் மற்றும் அவரின் நண்ப ர்கள் இருவர் என்னோடு வந்தனர்.
என்.கே.எஸ்.திருச்செல்வம் வரலாற்று ஆய்வாளர்
No comments:
Post a Comment