Monday, April 20, 2020

சிகிரியா எனும் சிம்மகிரி மலையில் 15 இந்துக் கோயில்கள்


சிகிரியா எனும் சிம்மகிரி மலையில் 15 இந்துக் கோயில்கள்



என்.கே.எஸ்.திருச்செல்வம்     
NKS/135      17 April 2020



சிம்மகிரி மலையில் பல இந்துக் கோயில்கள் பண்டைய காலத் தில் இருந்தன. இவற்றில் விஷ்ணு பகவானைத் தவிர பண்டைய காலத்தில் இருந்த தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் கோயில்கள் அமைக்கப் பட்டிருந்தன. இவை மலையின் மேற்குப் பக்கத்தில் பாறைகள் உள்ள  இடத்தில் அமைக்கப்பட்டிருந்தன. 



அம்மன், எமதர்மராஜன் ஆகியோரின் கோயில்கள் தனித் தனியே இருந்தன. இக்கோயில்களின் வடக்குப் பக்கத்தில் இருந்த சரிவான நிலப்பரப்பில் இருந்த பாறைகளின் மேல் இந்துக் தெய்வ ங்களுக்குரிய பல கோயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு சிவன், இராமன், முருகன், ஸ்கந்தன், சூரியன், சந்திரன், வருணன், அக்கினி, சோமன், பர்ஜன்யன், பிரஜாபதி, லாங்கலி (பலதேவன்), நாசத்தியர் கள் (அஸ்வினி குமாரர்கள்) ஆகிய 13 தெய்வங்களுக்கும் கோயில்கள் அமைந்திருந்தன. 


















இக்கோயில்கள் பற்றி பேராசிரியர் பரணவிதான தனது நூலில் கூறி யுள்ளார். பேராசிரியரின் இக்குறிப்பின் மூலம் மொத்தமாக 13 தெய் வங்களின் கோயில்கள் இங்கு இருந்துள்ளன. இவை பண்டைய காலம் முதல் இங்கு பரம்பரை பரம்பரையாக வழிபடப்பட்டுள்ளன.  இங்கிருந்த கோயில்களில் இந்த 13 தெய்வங்களும் தங்கள் தேவிகளு டன் இருக்கும் சிலைகள் காணப்பட்டன. இங்கு விநாயகர், விஷ்ணு ஆகிய இரு தெய்வங்களைத் தவிர ஏனைய எல்லா தெய்வ ங்களுக் கும் கோயில்கள் இருந்துள்ளன. 

விஷ்ணு பகவானுக்கு கோயில் இல்லாவிட்டாலும் அவரின் அவ தாரமான இராமனுக்கும் மற்றும் கிரு ஸ்ணனின் அண்ணனான பல தேவனுக்கும் கோயில்கள் இருந்துள்ளன. அத்துடன் முருகனுக்கு கும ரன் கோயில், ஸ்கந்தன் கோயில் என இரு வெவ்வேறு கோயில்கள் இருந்துள்ளன. மேலும் சந்திரனுக்கு ஓர் கோயிலும், சந்திரனின் அம்ச மான சோமனுக்கு தனியாக ஒரு கோயி லும் இருந்துள்ளன. 

இக்கோயில்களின் வடக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் அழ கிய மலர்களைக் கொடுக்கும் மரங்களும், பழங்களைக் கொடுக்கும் மரங்களும் வளர்க்கப்பட்டன. இதுதான் பண்டைய சிம்மகிரி அரண் மனையின் நந்தவனமாகும்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை


No comments:

Post a Comment