Saturday, April 18, 2020

கதிர்காமத்திற்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள தொடர்பு வெறும்138 வருடங்களே.




கதிர்காமத்துக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள தொடர்பு வெறும்138 வருடங்களே

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/127      22 Dec 2019




கதிர்காமத்தில் உள்ள முஸ்லீம் பெரியவரின் சமாதி கட்டப்பட்டு 138 வருடங்களே ஆகின்றன. இதற்கு முன்பு கதிர்காமத்திற்கும் முஸ்லி ம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1870ல் வட இந்தியாவில் இரு ந்து கதிர்காமத்திற்கு வந்த இந்து சந்நியாசியே பால்குடி பாபா எனும் கேசோபுரி சுவாமி யாவார். இவரின் முஸ்லிம் நண்பரான செய்யது ஜபார் அலிஷாபாவா என்பவர் 1880 ல் இறந்த பின் கேசோபுரி சுவாமி தற்போது பள்ளிவாசல் இருக்கும் இடத்தில் அவருக்கு ஓர் சமாதியை அமைத்தார். அன்று முதல் தான் இந்த சமாதியை வழிபட முஸ்லிம் கள் கதிர்காமத்திற்கு வந்தனர்.

எனவே கதிர்காமத்தில் முஸ்லிம்கள் வரலாறு வெறும் 138 வருடங்கள் தான். இதை விட இவர்கள் கூறுவது எல்லாம் வெறும் கற்பனையும், கட்டுக் கதையும் தான்.

சைவ மக்களுக்கு கதிர்காமத்துடன் 13,000 வருடங்களுக்கு மேற்பட்ட பாரம்பரியம் உள்ளது.(Ref. Helanka sivhela wangsaya by Danesh kodi puli arachi)
சிங்கள மக்களுக்கு துட்டகைமுனு காலம் முதல், (கி.மு 2ஆம் நூற்றாண்டு ) 2200 வருட தொடர்பு உள்ளது. (Ref.Kanda Upatha)



















ஆனால் இலங்கையில் இருந்து கொண்டு இந்த உண்மை கூட தெரி யாதவராக ஒரு முஸ்லிம் அமைப்பின் தலைவராக இருக்கும் ஒருவர் கதிர்காமம் இந்துக்களின் அல்லது பௌத்தர்களின் சொத்து இல்லை.அது முஸ்லிம்களின் சொத்து என கதை கட்டி விடுகிறார். வெறும் 138 வருடங்களை வைத்துக்கொண்டு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார். இவரது இந்தக் கதையில் ஏதோ உள்நோக்கம் உள்ளது போல் தெரிகிறது.
எனவே இந்துக்களும், பௌத்தர்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment