Sunday, April 19, 2020

அனுராதபுரத்தில் கிடைக்கப்பெற்ற பழமை வாய்ந்த களிமண் நந்தி


அனுராதபுரத்தில் கிடைக்கப்பெற்ற பழமை வாய்ந்த களிமண் நந்தி

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                          NKS/132      25 Feb 2020




அனுராதபுரத்தில் தேவநம்பியதீசன் காலத்திற்கு முன்பு  மகேசனுக் குரிய  கோயில் ஒன்று இருந்தது. இக்கோயிலை அழித்தே அழித்து அதன் மீது தூபராம தாதுகோபம் கட்டப் பட்டதாக குறிப்புகள் கூறு கின்றன.

அனுராதபுரத்தில் தூபாராம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வா ராச்சியின் போது மிகவும் பழமை வாய்ந்த களிமண் நந்தி ஒன்று  கண்டெடுக்கப்பட்டது.

இந்த நந்தி சிலை அபயகிரி தொல்பொருள் காட்சிச்சாலையில் வைக்கப் பட்டுள்ளது. இந்நந்தி தூபராம விகாரையின் கீழ் மறைந்து போன சிவன் கோயிலின் சின்னமாக இருக்க வேண்டும் என நம்பப் படுகிறது.

பண்டைய காலத்தில் மகேச கோயில் இருந்த இடத்திலே தூபராம தாதுகோபம் கட்டப்பட்டதாக பேராசிரியர் பரணவித்தானவும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
















மகேசன் என்பது சிவனைக் குறிக்கும் இன்னுமோர் பெயராகும்.    எனவே மகேச கோயில் ஓர் சிவன் கோயிலாக இருக்க வேண்டும் என எண்ணக் கூடியதாக உள்ளது. இதுபோல் தேவநம்பியதீசன் காலத்தி ற்கு முன்பு பல இந்துக் கோயில்களைக் கொண்ட கோயில் நகரமாக அனுராதபுரம் விளங்கியது.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 

No comments:

Post a Comment