Saturday, April 18, 2020

பிராமணன் ஓர் வந்தேரியா?


பிராமணன் ஓர் வந்தேரியா?

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/126      22  Dec 2019



பிராமணன் ஓர் வந்தேரி..
தமிழனை அழிக்க வந்தவன்...
வடநாட்டுக்காரன்....ஆரியன்..
"பார்ப்பானையும், பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி"  என்று கூறி தமிழர்களை முட்டாள்கள் ஆக்கியுள்ளார்கள் நாத்திகவாதிகள்.

இப்படியெல்லாம் பொய்ப் பிரச்சாரம் செய்யும் நாத்திக வாதிகள் கூறுவது தான் உண்மையென்று 
இன்றைய தமிழரில் சிலர்  நம்பு கின்றனர். சைவத்தை அழிப்பதற்காக நாத்திகவாதிகள்  தன் கையில் எடுத்த ஆயுதங்களில் ஒன்றுதான் இந்த பிராமண ஒழிப்பு வாதம்.

இன்றைய தமிழர்கள்  தமது வரலாற்றைப் படிப்பதில்லை.நாத்தி கனும், நடிகனும், அரசியல் வாதியும் என்ன சொல்கிறார்களோ அதை சுயமாக சிந்திக்காமல் அப்படியே நம்புபவனாக   மாறிக் கொண்டிருக்கிறான் இன்றைய தமிழன்.

அன்றைய தமிழன்  உலகிற்கே அறிவியலை கற்றுக் கொடுத்தான்.
இன்றைய தமிழன் தன் வரலாற்றையே கற்றுக்கொள்ளாமல் இருக் கிறான்.

பிராமணனுக்கு பார்ப்பனன், அந்தணன், புரோகிதர் என பல பெயர் கள் தமிழில் உள்ளன.இவர்கள் தமிழர்கள். தமிழரின் சங்க நூல்க ளில் இவர்களைப் பற்றிப் பெருமையாகக் கூறப்பட்டுள்ளது.

புறநானூறு, அகநானூறு, பரிபாடல், திருமுருகாற்றுப்படை,பதிற்றுப் பத்து, மதுரைக்காஞ்சி, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க நூல் களில்  அந்தணரைப் போற்றிப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.

மனித சமுதாயத்திற்கும், மன்னுயிர்களுக்கும் தன் வாழ்க்கை யையே அர்ப்பணித்தவன் அந்தணன். மன அமைதி பெற்றவர்களா கவும், தன்னலம் துறந்தவர்களாகவும், பிறர் நலத்துக்கென்றே வாழ்ந்தவர்களாகவும், மன்னனாலும் மக்களாலும் போற்றி மதிக்கப் பட்டவர்களாகவும் அந்தணன் எனும் இந்தத் தமிழன் விளங்கினான் என சங்க நூல்கள் கூறுகின்றன.

அறவோர், அருளாளர், ஆன்றோர், சான்றோர், மறையோர் எனப் புகழப் பட்டவர்கள் இந்தத் தமிழ் அந்தணர்கள் என தமிழரின் சங்க நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது.

உலகியற் பொருளையும், அதற்குரிய அறநெறிகளையும் அரசர்க ளுக்கு வழிமொழியும் பொறுப்பும் அந்தணர்க்கு இருந்தது. ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் போன்ற ஆறு தொழில்களை இந்தத் தமிழன் செய்தான். இவன் வைகறைப் பொழுதில் எழுந்து வேதம் ஓதுபவன் எனத் தமிழரின் சங்க நூல்க ளான பரிபாடலும், மதுரைக் காஞ்சியும் கூறியுள்ளன அறத் தொழிலை செய்து, தீயை (நெருப்பு) வழிபட்டவன் இந்தத் தமிழன் என தமிழரின் சங்க நூலான புறநானூறு கூறுகின்றது.

நாட்டு நலன் கருதி, மக்கள் நலன் கருதி, வேதங்களை ஓதி, வேத நூல்களில் விதிக்கப்பட்ட முறைப்படி வேள்விகள் பல செய்து நாட் டைக் காக்க உதவி செய்தான் இந்த அந்தணத் தமிழன் என தமிழ ரின் சங்க நூலான புறநானூறும், பெரும்பாணற்றுப்படையும் கூறு கிறது என்பது எத்தனை தமிழருக்குத் தெரியும்?

அந்தணரின் பிரதான தொழிலானது உலக மக்களின் துன்பங்க ளைப் போக்க அருள் சுரந்து ஓம்புதல் மட்டுமல்லாது, அரசன் நாட்டை விட்டு வெளியே செல்லும் காலத்தில் நாடாளும் தொழிலும் இந்த தமிழ் அந்தணர்க்கு உரியது என தொல்காப்பியர் கூறியுள் ளமை எத்தனை தமிழருக்குத் தெரியும்?

இவை மட்டுமா இந்தத் தமிழ்ப் பார்ப்பணன் செய்த தொழில்கள்?

அக்காலத்தில் அரசனுக்கு உதவும் பொருட்டு அண்டை நாட்டுக்குத் தூது சென்று போரைக் கைவிடவேண்டும் என வேண்டிக் கொண்ட வன் இந்தத் தமிழ் பார்ப்பனன் தான் என தமிழரின் சங்க நூலான அகநானூறு கூறுகின்றமை எத்தனை தமிழருக்குத் தெரியும்?

இவ்வாறு நாட்டு நலனுக்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்ட தூய தமிழனான அந்தணனை வந்தேரி எனவும் ஆரியன் எனவும் கூறி...
சைவத்தை அழிக்க வந்த நாத்திக வாதிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க, தமிழரின் உண்மையான வரலாற்றைத் தெரிந்து கொள்ளசங்க நூல்களைப் படியுங்கள்.


என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்.

இலங்கை 

No comments:

Post a Comment