Saturday, April 18, 2020

சைவப்புலவர் திருவள்ளுவரின் உண்மையான உருவம்



சைவப்புலவர் திருவள்ளுவரின் உண்மையான உருவம்




என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/117      30 May 2018


















             1931 ஆம் ஆண்டு எச்.எ.பொப்லே எழுதிய The Sacred Kural  எனும் நூலில்   
                                                                உள்ள திருவள்ளுவர் படம்


இன்று பாடப் புத்தகங்களில், தமிழக அரசுப் பேருந்துகளில், அரச அலுவலகங்களில், நீதிமன்றங்களில் என  பல இடங்களிலும், நாம் பார்க்கும் திருவள்ளுவரின் உருவம் கற்பனையாக, அன்றைய அரசின்  விருப்பப்படி வரையப்பட்ட பொய்யான வடிவம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
 மார்பு வரை நீண்ட வெண்தாடியோடு, ஒரு கையில் எழுத்தா ணியையும், மறு கையில் பனை ஓலைச் சுவடிகளையும் பிடித்தபடி, தோளிலே துண்டும் அணிந்தவண்ணம் அமர்ந்திருக்கும் திருவள்ளு வர் உருவம் 1959 ஆம் அன்றைய ஆட்சியாளர்களின் வேண்டு கோளின் படி ஓவியர் வேணுகோபால சர்மா என்பவரால் வரையப் பட்டது.


ஓவியர் வேணுகோபால சர்மா வரைந்த வள்ளுவர் ஓவியம்

அந்தத் திருவள்ளுவர் ஓவியம், தமிழக அரசால்  ஏற்றுக் கொள்ளப் பட்டு, பிரமாண்டமான விழா நடத்தப்பட்டு 1964-ம் ஆண்டு அப்போ தைய இந்திய ஜனாதிபதி ஜாகீர் உசேனால் தமிழ்நாடு சட்டமன்ற த்தில் திறந்துவைக்கப்பட்டது. அந்த ஓவியம் மட்டும் அல்ல. நின்ற நிலையில் திருவள்ளுவர், தமிழ்த்தாய், ஆகிய ஓவியங்களையும் வேணுகோபால சர்மாவே வரைந்தார்.










1964 ஆம் ஆண்டு அரசு 
அறிமுகப்படுத்திய புதிய
திருவள்ளுவர் படம்.









உண்மையில் இது தான் திருவள்ளுவரின் வடிவமா? இல்லை! தமிழ் சைவப்புலவர் திருவள்ளுவரின் வடிவம் சிலரின் சூழ்ச்சியினால்  வேண்டுமென்றே சிதைக்கப்பட்டுள்ளது.

2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நம் சைவப்புலவர் திரு வள்ளுவரின் சிலை அகழ்வாரச்சியின் போது மயிலாப்பூரில் கண் டெடுக்கப்பட்டது. இது கி.பி. 14 ஆம் நுற்றாண்டுக்குரியது என ஆராய்ச்சியாளர்களால் கூறப்பட்டுள்ளது. இதில் திருவள்ளுவர் மேல் ஆடை எதுவும் அணியாமல் உடலிலே பூணூல் மட்டும் அணிந்து ள்ளார். வலது கையில் சிவனின் சின் முத்திரையுடன் உருத்திராட்ச மாலையையும் ஏந்திய வண்ணம், சம்மணமிட்டு உட்கார்ந்து இருக்கிறார். இடது கை சிதைந்துள்ளது. மார்பு வரை நீண்ட தாடியு டன் காணப்படுகிறார். தலையில் சடாமுடியுடன் காணப் படும் இவரின் முகம் சற்று சிதைந்துள்ளது. நெற்றியில் விபூதி, பொட்டு போன்றவை சரியாகத் தெரியவில்லை. ஆனால் நெற்றியில் விபூதி, சந்தனம் போன்றவற்றை திருவள்ளுவர் அணிந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அதற்கு ஆதாரமாக இன்னு மோர் பழைய திருவள்ளுவர் படமும் உள்ளது.

மயிலாப்பூரில் அகழ்வின்போது கிடைக்கப்பெற்ற திருவள்ளுவர் சிலை.       கி.பி. 14ஆம் நுற்றாண்டு


1931 ஆம் ஆண்டு The Sacred Kural or The Tamil Veda of Tiruvalluvar எனும் பெயரில் எச்.எ.பொப்லே என்பவர்  திருக்குறள் பற்றி எழுதிய ஆங்கில நூலில் திருவள்ளுவரின் பழைய படம் ஒன்று காணப்படு கிறது. இப்படத்தில் நெற்றியில் மூன்று விபூதிப் பட்டை மற்றும் சந்தனம், மார்பில் பூணூல், வலது கையில் சின் முத்திரை மற்றும் உருத்திராட்ச மாலை, இடது கையில் ஏட்டுச் சுவடி ஆகியவற்றுடன் சம்மணம் கட்டி உட்கார்ந்திருக்கிறார். இடுப்பில் துண்டு மட்டுமே கட்டியுள்ளார். மேல் ஆடை, துண்டு எதுவும் அணியவில்லை. இது தான் திருவள்ளுவரின் உண்மையான உருவம். இப்படத்தின் கீழ் திருவள்ளுவ நாயனார் என எழுதப்பட்டு ஆங்கிலத்தில் Traditional Figure of Poet - From Pandit K.Vadivelu Chettiyaar’s Edition எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இத்தனை தெளிவான, பண்டைய உருவ அமைப்புடன் கூடிய திருவள்ளுவர் வடிவம் இருக்கும் பொழுது, இவர்தான் திருவள்ளுவர் என்று அன்றைய தமிழக அரசு புதிதாக அங்கீகாரம் செய்துள்ள படத்திலே விபூதி இல்லை, சந்தனப்பொட்டு இல்லை, பூணூல் இல்லை, கையில் சின் முத்திரை இல்லை, உருத்திராட்ச மாலை இல்லை. மொத்தத்தில் திருவள்ளுவர் ஓர் சைவப்புலவர் என்பதற் கான அடையாளங்கள் அனைத்தும் வேண்டுமென்றே அழிக்கப் பட்டுள்ளன.
ஏனைய மதத்தவர்கள் திருவள்ளுவரை ஓர் மத சார்பற்றவர் எனக் கூறுவதற்கும், கிறிஸ்தவர்கள் திருவள்ளுவர் ஓர் கிறிஸ்தவர் எனக் கூறி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வத ற்கும் திராவிட அரசால் சிதைக்கப்பட்டு, புதிதாக மாற்றியமைக்கப் பட்ட இந்தப் புதிய திருவள்ளுவர் வடிவமே ஏதுவாக அமைந்தது எனலாம்.
இந்த படத்தினை வரைந்த ஓவியர் வேணுகோபால் சர்மா சிலர் கபட நோக்கத்துடன் கூறிய வடிவத்தை மனதில் கொண்டு, ஒரு கற்ப னையில் தான் கண்ட, கேட்ட செய்திகளின் அடிப்படையில் இப்படித் தான் வள்ளுவர் இருந்திருப்பார் என்ற யூகத்தில் இந்தப் படத்தை வரைந்துள்ளார். இந்த படம் அங்கீகாரம் செய்யப் பட்டதிலும் ஒரு  பின்னணி உண்டு. வள்ளுவர் கோட்டத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி நடந்த ஒரு விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி இவ்வாறு பேசினார்.

 நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த போது, திரு வள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், அந்த படத்தை நீங்களே கொண்டு வாருங்கள் என்றார். வேணுகோபால் சர்மா என்ற ஓவியர் மூலம்  திரு வள்ளுவர் படத்தை வரைந்தேடுத்தோம். அதை அறிஞர் அண்ணா பெருந்தலைவர் காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே  வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால் அதிலும் சிலருக்கு குறை இருந்தது. வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால் பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல  படத்தை வரைந்து கொடுத்தார். சட்டசபையில் இந்த படத்தை வைக்கவேண்டுமென கேட்டபோது, தி.மு.க.காரர்கள்  இந்த படத்தை வைத்தால், நாங்கள் வைத்தது என அடிக்கடி கூறிக்கொள்வர் என நினைத்து நாங்களே இந்த படத்தை வைக்கிறோம் என பக்தவத்சலம் கூறினார்

அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் வேணுகோபால் சர்மா வரைந்த இந்த திருவள்ளுவர் படம் தமிழக அரசால்  அங்கீகரிக்கப் பட்டது. இந்த படத்தினைத் தான் அரசு அலுவலகங்களிலும், பள்ளிக ளிலும் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிலும் வைக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்ட திருக்குற ளோடு இந்த வள்ளுவர் படமும் வைக்கப்பட்டது.

 
வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் உள்ள திருவள்ளுவர் சிலைகள்


கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் கட்டினார். அங்கு வள்ளுவர் சிலையை  உட்கார்ந்த நிலையில்தான் அமைத்தார். ஆனால் கன்னியா குமரியில் உள்ள வள்ளுவர் சிலையை நின்ற கோலத்தில் அமைத்த தோடு வள்ளுவரையும் அய்யனே என் அய்யனே என்று பெயர் மாற்றம் செய்து துதி செய்தார். மேலும் சிலையானது பெண் நளினத்தில் இருப்பது போல் தோன்றுகிறது என்றும் சிலர் சொன்னா ர்கள். ஆனாலும் வள்ளுவர் தாடி மீசையுடன் தான் கன்னியா குமரி யில் இருக்கிறார். இப்படி கலைஞர் கருணாநிதி வள்ளுவர் உருவ த்தை அமர்ந்த கோலத்திலிருந்து நின்ற கோலத்திற்கு மாற்றம் செய்ததையும், வள்ளுவரை அய்யன் என்று மாற்றியதையும் எந்த சைவத் தமிழ் உணர்வாளர்களும் கண்டு கொள்ளாததோடு, கண்டி க்கவும் இல்லை என்பதுதான் வேதனை.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.

No comments:

Post a Comment