Wednesday, April 22, 2020

பண்டைய செங்கடகல நகரில் இந்து சமய அடையாளங்கள்

பண்டைய செங்கடகல நகரில் இந்து சமய அடையாளங்கள்


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/144    21 April 2020



இலங்கையின் கடைசித் தலைநகரமான செங்கடகல எனும் கண்டி நகரத்தின் பண்டைய கால இந்து சமய அடையாளங்களைத் தேடிச் சென்ற போது..
செங்கடகல இராச்சியம் 1469 முதல் 1815 வரையான 346 ஆண்டுகள் இலங்கையின் தலைநகராக விளங்கியது. இதுவே பின்பு  கண்டி எனும் பெயரைப்பெற்றது. கண்டி மாநகரில் மன்னர்களாக ஆட்சி செய்தவர்கள் இந்து சமயத்தையும், பௌத்த சமயத்தையும் பேணிப் பாதுகாத்தனர்.



































இங்கு மன்னனின் மாளிகை, அரசவை மண்டபம், தலதா மாளிகை போன்றவை அமைக்கப்பட்டன. இவற்றின் அருகிலேயே மன்னர்கள்  கோயில்களையும் கட்டினர். அவற்றின் சான்றுகள் இன்றும் அங்கே காணப்படுகின்றன. 

செங்கடன் எனும் சிவனுக்குரிய கோயில் பிற்காலத்தில் நாத தேவா லய என பெயர் மாற்றம் பெற்றது. இதைத்தவிர விஷ்ணு கோயில், பத்தினி அம்மன் கோயில், முருகன் கோயில், விநாயகர் கோயில் ஆகியவையும் கண்டி மன்னர்களால் பூஜிக்கப்பட்டன. நாத எனும் சிவன், விஷ்ணு, பத்தினியம்மன், ஆகியோருக்கான கோயில்கள் தலதா மாளிகை வளாகத்திலும், முருகன் மற்றும் விநாயகர் கோயி ல்கள் தலதா மாளிகை வளாகத்திற்கு வெளியேயும் அமைக்கப்பட்டி ருந்தன.


இக்கோயில்களில் இந்து முறைப்படி பூஜைகள் நடந்தன. ஆனால் பிற்காலத்தில் இவை அனைத்தும் மாற்றப்பட்டு, தலதா மாளிகை வளாகம் பௌத்த சமயத்திற்கு உரியதாக உருமாறி விட்டது. கோயி ல்கள் மாற்றப்பட்டாலும் பண்டைய காலத்தில் அக்கோயில்களில் இருந்த சிலைகள் இன்றும் தலதா மாளிகை வளாகத்தில் காணப் படுகின்றன

தலதா மாளிகை வளாகத்தில் பண்டைய கால சிவலிங்கம், மகரக் கோமுகி, விஷ்ணு சிலை, அம்மன் சிலையின் உடைந்த பாகம், விநா யகர் சிலை, வைரவர் புடைப்புச் சிற்பம் ஆகியவற்றைக் கண்டேன். இவற்றில் மகரக் கோமுகி மற்றும்  விஷ்ணு, அம்மன், விநாயகர் சிலைகள் ஆகியவை தொல்பொருள் காட்சிச்சாலையில் உள்ளன.















இவ்வளாகத்தில் இலங்கையில் எங்கும் காணக்கிடைக்காத பெரிய வடிவிலான, அழகிய கஜலட்சுமி புடைப்பு சிற்பத்தையும் கண்டேன். இவை யாவும் கண்டி மாநரில், தலதா மாளிகை வளாகத்தில் பண் டைய காலத்தில் இந்து சமயம் தழைத் தோங்கி இருந்தமைக்கான வலுவான ஆதாரங்களாகும்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்.

இலங்கை

No comments:

Post a Comment