Saturday, April 18, 2020

யார் இந்த இராவணன்? -நூல் அறிமுகம்



யார் இந்த இராவணன்?-

நூல் அறிமுகம் 

 

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/120      8 Oct 2019



"யார் இந்த இராவணன்?" எனும் இந்நூல் எனது 8 ஆவது. நூலாகும்.
கடந்த சில வருடங்களாக இராவணன் பற்றிய அக்கறை இலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதை அவதா னிக்கக் கூடிய தாக இருந்தது. இராவணன் தங்களின் மூதாதை என சிங்கள மக்க ளில் சிலர் கூறி வருகின்றனர். இக்கூற்றின் உச்சக் கட்டமாக இராவ ணனின் சந்ததியினர் நாங்களே என சிங்கள பாராளுமன்ற உறுப் பினர் ஒருவர் கூறியபோது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதை எதிர்த்ததாகவும், இந்த உரிமை தொடர்பாக இருவருக்குமி டையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பத்திரிகைகளில் படித்தேன்.

சிறுவயதில் சமய பாடத்தில் இராவணன் சிறந்த சிவபக்தன் எனப் படித்ததும், இராவணன் பற்றி திருநாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் இராவணன் மேலது நீறு எனப் பாடியதும் ஞாபகம் வந்தது. நாம் அணியும் சிவசின்னங்களில் முதன்மை யான திருநீற்றின் மகிமை பற்றிப் பாடும்போது இராவணனின் பெயருடன் சேர்த்து அதன் மகி மையை திருநாவுக்கரசர் கூறி யிருப்பது, இராவணன் சிவனை வண ங்கிய ஓர் தமிழ் மன்னன் என்பதை சிறுவயது முதல் என் அடிமன தில் ஆழமாகப் பதிய வைத்திருந்தது.

இந்நிலையில் இராவணனின் சந்ததியினர் நாங்களே என சிங்கள மக்களில் சிலர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. தமிழர் என்ற ஓர் இனம் உருவான காலம் முதல் அவர்கள் சிவனையே பெருங்கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர் என்பதை நூல்கள் மூலம் அறிந்துள்ளோம். அவ்வழியே இரா வணனும் சிவனையே பெருங் கடவுளாக வழிபட்டு வந்துள்ளான். உண்மை இப்படி இருக்கையில் சிவனை வழிபடாத சிங்கள மக்களின் மூதாதையாக இராவணன் எப்படி இருக்க முடியும்?

இந்தக் கேள்விகளுடன் இராவணனின் உண்மை வரலாற்றை ஆராய வேண்டும் எனும் ஆர்வம் ஏற்பட்டது. இராவணனைப் பற்றி ஆராயும் போது மக்கள் மத்தியில் இராவணன் பற்றி நில வும் சர்ச்சைகள் பல வெளிப்பட்டன. இச்சர்ச்சைகளின் உண் மைத்தன்மையை ஆராய்வ தன் மூலம் இராவணனின் மறைக்கப் பட்ட, திரிபுபடுத்தப்பட்ட உண்மை வரலாற்றை வெளிக் கொணர முடியும் எனும் நம்பிக்கை ஏற்பட்டது.

இந்த நம்பிக்கையின் பயனாக நான் மேற்கொண்ட ஆய் வின் போது இராவணன் தொடர்பாக இலங்கையில் நிலவும் ஐதீகங்கள், இராவ ணனுடன் தொடர்புடைய இடங்கள். இரா வணன் தொடர்பான பிரா மிக் கல்வெட்டுக்கள் மற்றும் தென் னிந்தியாவில் உள்ள செப்பேடு கள் போன்றவை சான்றுகளாகக் கிடைத்தன. இவற்றுடன் இராவ ணன் மற்றும் இராமாயணம் போன்றவை பற்றி பல்வேறு காலத்தி லும் எழுதப்பட்ட நூல் களில் உள்ள சில குறிப்புகளும் கிடைத்தன. இவை எல்லாவற் றுடன் வால்மீகி எழுதிய மூல இராமாயணத்தில் உள்ள பல குறிப்புகளையும் தேடி எடுத்தேன். இவற்றுடன் இராமா யண காலம் பற்றி இந்திய அறிஞர்கள் கணித்த வானிலை ஆய்வுக் குறிப்புகள், இந்தியாவில் உள்ள பிரசித்திபெற்ற சில சிவாலயங் களின் வரலாற்றுக் குறிப்புகள், தென்னிந்தியாவில் பாடப்பட்ட தேவார திருப்பதிகங்கள் போன்றவைகளையும் ஆராய்ந்தேன்.

வால்மீகி எழுதிய இராமாயணத்தை ஆராய்ந்தபோது இராவணன் மூவுலகையும் ஆட்சி செய்தமையும், அந்த மூன்று உலகங்களும் எங்கிருந்தன என்பதையும் தெரிந்து கொண்டேன். மேலும் உலக நாடுகள் பற்றி வால்மீகி முனிவர் கொண்டிருந்த ஆழ்ந்த புலமையும் தெரிய வந்தது. இதன் மூலம் தென்னிந்தி யாவின் தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் 7000 ஆண்டுகளுக்கு முன்பு இரு ந்த நாடுகள்,பாண்டியர் ஆண்ட கபாடபுரம், தமிழரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தென்கிழக்கா சிய நாடுகள், கடலில் அமிழ்ந்து போன குமரிநாடு போன்றவை பற்றிய உண்மைகளையும் அறியக் கூடிய தாக இருந்தது.    

வால்மீகி எழுதிய இராமாயணத்தை ஆராய்ந்ததன் பயனாக அதில் இராவணன் பற்றிக் கூறப்பட்டுள்ள பல விடயங்கள்,   கம்பராமா யணம் உட்பட பிற்காலத்தில் எழுதப்பட்ட இராமா யண நூல்களில் திரிபு படுத்தப்பட்டும், மாற்றி எழுதப்பட்டும் இருந்தமையும், இதன் மூலம் இராவணன் பற்றிய சாதகமான உண்மைகள் சிதைக்கப் பட்டிருந்தமையும் தெரிய வந்தது. இராவ ணன் பற்றி மக்கள் மத்தி யில் நிலவும் பிழையான கருத்துக்க ளுக்கும் இந்நூல்களே காரணம் என்பதையும் உணர முடிந்தது.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இராவணன் பற்றிய உண்மைகளை ஆராயத் தொடங்கியதன் விளைவாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையை ஆட்சி செய்த தீவிர சிவ பக்தனும்,இலங்கை வேந்தனுமாகிய இராவணன் வாழ்ந்த காலம், ஆட்சி செய்த பிரதேச ங்கள், ஸ்தாபித்த சிவாலயங்கள், இராவ ணனின் தலைநகரம், இராவணனின் வல்லமைகள் போன்றவை பற்றிய உண்மைகளை யும் எனக்குக்  கிடைத்த சான்றுகளுடன் இந்நூலில் விபரித்துள் ளேன். மேலும் இராவணனுக்கு பத்துத் தலைகள் இருந்தனவா? இராவணன் பெண் பித்தனா? ஆணவம் பிடித்தவனா? போன்ற சர்ச் சைகள் மற்றும் இராவணனின் பரம் பரை, குலம், இனம், இராவணன் பேசிய மொழி ஆகியவை பற் றிய உண்மைகளையும் சான்றுகளு டன் ஆவணப்படுத்தியுள் ளேன். இவை பற்றி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் தொடராக எழுதினேன். தற்போது 7 வருட ஆய்வின் பின் யார் இந்த இராவணன்எனும் இந்நூல் ஓர் ஆவண நூலாக வெளிவருகிறது.      

இந்நூலின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பல வருட காலமாக ஓர் சர்ச்சைக்குரிய வில்லனாகப் பார்க்கப்பட்டு வந்த தமிழ் மன்னன் இராவணனின் பெயருக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த களங்கம் ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என நம்புகிறேன். ஓர் மாற்றானின் மனைவியைக் கடத்திக் கொண்டு செல்வது பெரிய குற்றம் என் பதை யாராலும் மறுக்க முடியாது. அதே சமயம்  இராவணன் அச் செயலைப் புரிவதற்கு இராமன் செய்த செயல்களே முக்கிய காரண ங்களாக உள்ளமை இராவணன் செய்த குற்றத்தை நியாயப் படுத் துகிறது.

ஒருவன் இன்னொருவனுக்கு செய்யும்  செயலுக்கான எதிர் விளைவு கள் அவனால் பாதிக்கப்பட்டவனால் செய்யப்படும் எனும் சாதாரண விதிமுறைக்கு இராமனும், இராவணனும் விதி விலக்கல்ல என்பதை இராமாயணச் சம்பவங்கள் நமக்கு உணர் த்துகின்றன.

அமைதியுடன் வாழ்ந்து வந்த அசுரர்களின் வாழ்விடத்தை 
கைப்பற்றி, அவர்களை தேவர்கள் எனும் இனத்தவர் அடித்து விரட்டினர். 

அசுரர்களின் வாழ்விடத்தையும், அவர்களையும் அழித்ததினால் அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்தினர்.

தேவர்களைத் துன்புறுத்தியதால் இராமன் இராவணனின் படை களை அழித்தான்.

இராமனை மணக்க விரும்பியதால் இலட்சுமணன் இராவண னின் தங்கையின் மூக்கையும், முலையையும் அறுத்து அங்க வீனப்படுத்தினான்.

தங்கையின் அங்கங்களை அறுத்ததினாலும், தன் படைகளை அழித்ததினாலும் இராவணன் சீதையைக் கவர்ந்து வந்தான்.

தன் மனைவியைக் கவர்ந்து வந்ததினால் இராமன் இராவண னையும், அவனின் சகோதரனையும், மகனையும் கொன்றான்.

எனவே இதில் யார் நல்லவர்கள்? யார் கேட்டவர்கள்? என்பது முக்கிய மல்ல. ஒரு செயலுக்கு எதிர்விளைவுகள் தொட ர்ந்து நடந்துள்ளன என்பதே நாம் கவனிக்க வேண்டிய  முக்கிய விடயமாகும். இதில் முதன் முதலில் குற்றங்களைப் புரிந்தவர்கள் தேவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தேவர்கள் ஆரம்பித்த குற்றச் செயலின் எதிர் விளைவாக அசுரர்கள், இராமன், லட்சுமணன், இராவணன் ஆகி யோர் குற்றச் செயல்களைப் புரிந்துள்ளனர்.

இராமாயணச் சம்பவங்களைப் பொறுத்த வரையில் இராவணன் குற்றம் புரிந்தவன் என்றால் அக்குற்றத்தைப் புரியக் காரணமாக இருந்த இராமனும், லட்சுமணனும் குற்றம் செய்தவர்களே. இவர்கள் குற்றம் புரியக் காரணமாக இருந்த அசுரர் களும் குற்றம் செய்தவர் களே. அசுரர்கள் குற்றம் புரியக் காரணமாக இருந்த தேவர்களும் குற்றம் புரிந்தவர்களே.

அதே சமயம் இராமன், லட்சுமணன் ஆகியோர் புரிந்த செயல்கள் நியாயமானவை என்றால் இராவணன் செய்த செயலும் நியாயமா னதே. மேற்சொன்ன காரண காரியங்களை வைத் துப் பார்க்கும் போது இராவணனை மட்டும் குற்றவாளிக் கூண் டில் நிறுத்துவது எந்த வகையில் நியாயமாகும்? எனவே தமிழ் மன்னன் இராவணன் மீது மக்கள் மத்தியில் இருந்த பிழையான அபிப்பிராயத்தையும், அவன் மீது சுமத்தப்பட்ட நியாயமற்ற குற்றத்தையும் தக்க ஆதார ங்கள் மூலம் நிவர்த்தி செய்ய இந்நூல் மூலம் முயற்சி செய்துள்
ளேன்.

எல்லோரும் வெறுக்கும் இராவணன் மீது ஏன் எனக்கு மட்டும் இந்த அக்கறை, பற்று, பாசம் என இராமன் மீது பற்று வைத்துள்ளவர்கள் கேட்கலாம். காரணம் சிவ பக்தன், தமிழன், தமிழ் மொழியைப் பேசு பவன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். இந்த மூன்று தன்மை களையும் கொண்ட இராவணன் என் மனம் கவர்ந்த மாவீரன்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 


No comments:

Post a Comment