Friday, April 17, 2020

தென்னிலங்கையில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டகணபதி கோயில்

தென்னிலங்கையில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கணபதி கோயில் 

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/114       11 Feb 2018





தென்னிலங்கையில் மாத்தறை நகருக்கு அருகில் உள்ள தெவிநுவர என அழைக்கப்படும் தெய்வந்துறை இலங்கையின் பண்டைய கால முக்கிய துறை முகமாகும். இங்கு பல கோயில்கள் அமைக்கப் பட்டிருந்ததால் இது கோயில் நகரம் என அழைக்கப்பட்டது.

இங்கு  900 வருடங்களுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட விநாயகர் கோயில் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது.  இக்கோயில் பொ.ஆ 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் முற்றாக  அழிக்கப்பட்டது. இக்கோயில் மீண்டும் கட்டப்படவில்லை.
இக்கோயிலின்  எஞ்சிய கருவறைப் பகுதி மட்டும் இப்பொழுது காணப்படுகிறது.



பொலநறுவையில் காணப்படும் கோயில்களை ஒத்த கட்டிடக்கலை அமைப்புடன் இக்கோயில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இன்று " கல்கே" என்ற பெயரில் அழைக்கப்படும் இவ்வாலயம் பற்றி சிங்கள சந்தேச நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.





No comments:

Post a Comment