Monday, April 20, 2020

மிகுந்தலையில் இந்து சமயச் சின்னங்கள்



மிகுந்தலையில் இந்து சமயச் சின்னங்கள் 


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                          NKS/134  3 March 2020








அனுராதபுரத்தின் கிழக்கில் சுமார் 11 கி.மீ தொலைவில் மிகுந் தலை அமைந்துள்ளது. 2000 வருடங்களுக்கு முற்பட்ட காலங்களிலே இப்பகுதியில் இந்து தெய்வ வழி பாடுகள் நிலவியிருந்தமை தொடர் பான சான்றுகள் பல காணப்படுகின்றன.

  





















மிகப்புராதன அம்மன் சிலை
மிகுந்தலை மலையில் உள்ள அம்பஸ்தல தூபியின் தெற்குப் பக்கத் தில் மிகப் புராதனமான அம்மன் சிலை யொன்று கண்டெடுக்கப் பட்டது. இச்சிலை இங்கிருந்த அம்மன் கோயிலின் சிலையாக இரு க்க வேண்டும் என நம்பப்படுகிறது.

சப்த கன்னியர் வழிபாடு
மிகுந்தலையில் சப்த கன்னியர் வழிபாடு நிலவிய கோயில் ஒன்று இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஏனெனில் இங்கு சப்த கன் னியர் எழுவரில் குமாரி, இந்தி ராணி ஆகிய இருவரின் சிலைகளும்  காணப்படுகின்றன.

 




















கந்தக்க தூபியில் பிள்ளையார் சிற்பம்

 மிகுந்தலை மலைப்பகுதியில் பல மலைக்குன்றுகள் காணப்படுகி ன்றன. இக்குன்றுகளில் ஒரு குன்றில் கந்தக்க தூபி எனும் புராதன தூபி அமைந்துள்ளது. இத்தூபியில் வாகல்கட என்றழைக்கப்படும் வாயிலில் பிள்ளையார் சிற் பம் செதுக்கப்பட்டுள்ளது.

கந்தக்க தூபியில் நந்தி சிலையும்,   நாகராஜர் உருவமும்.

    கந்தக்க தூபியில் விநாயகர் மட்டுமல்லாது  நந்தி சிலையும், நாக ராஜர் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. தூபியின் நான்கு பக்கங்க ளிலும் உள்ள வாகல்கடவில் அமைக்கப்படும் எட்டு கற்தூண்களில் இரண்டு தூண்களில் அழகிய நந்தியின் சிற்பம் காணப்படுகிறது. இது இப்பகுதியில் நிலவிய சிவ வழிபாட்டின் அடையாளமாகும். மேலும் வாயிலில் நாகராஜனின் சிற்பமும் காணப்படுகின்றது. இதன் மூலம் இப்பகுதியில் சிவன் மற்றும் நாக வழிபாடுகளும் சிறப் புடன் விளங்கியுள்ளன எனக்கூறலாம். 

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 

No comments:

Post a Comment