Sunday, April 19, 2020

போர்த்துக்கேயர் அழித்த பெந்தோட்டை காளி கோயில் நூல் அறிமுகம்

                      போர்த்துக்கேயர் அழித்த                             பெந்தோட்டை  காளி கோயில்- 

நூல் அறிமுகம் 

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/129    28 Dec 2019


"போர்த்துக்கேயர் அழித்த பெந்தோட்டைக் காளிகோயில்" எனும் இந்நூல் எனது 9 ஆவது நூலாகும். இலங்கையில் கடந்த 30 வருட யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்த சில சைவக் கோயில்கள் அழிக்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்பு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்த மிகப்பழமை வாய்ந்த சில சைவ வழிபாட்டுத் தலங்கள் பெளத்த பிக்குகள் சில ரால் பெளத்த வழிபாட்டுத் தலங்கள் என உரிமை கொண்டாடப் படுகின்றன. இதற்கு வலுசேர்க்கும் வகையில் இவை பெளத்த தொல் பொருள் சின்னங்கள் நிறைந்த இடங்கள் எனவும், இதனால் தமிழர் கள் இங்கு எந்தவித கோயில் கட்டுமானப் பணிகளிலும் ஈடுபடக் கூடாது எனவும் கூறி இலங்கைத் தொல்பொருள் திணைக்களமும் தமிழர்களின் ஆலய வழிபாட்டிற்கு நெருக்கடிகள் கொடுத்து வருகி ன்றமை ஊடகங்கள் மூலம் நாம் அறியும் விடயமாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா சிவன் கோயில், இலங் கைத்துறை கல்லடி நீலியம்மன் கோயில், மத்தல மலை முருகன் கோயில், மட்டக்களப்பு மாவட்டத்தில் குசலானமலை முருகன் கோயில், கச்ச கொடிமலை முருகன் கோயில், அம்பாறை மாவட்ட த்தில் சங்கமன்கண்டி மலை முருகன் கோயில், கண்ணகி புரம் முருகன் கோயில், வவுனியா மாவட்டத்தில் வெடுக்குநாரிமலை சிவன் கோயில் போன்றவை இவற்றில் சிலவாகும்.

இந்நிலையில் சிங்கள பெளத்தர்களே சைவக் கோயில்களை அழி த்து அங்கு புத்தர் சிலைகளை வைக்கிறார்கள் எனும் கருத்து தமிழர் களிடையே பரவலாக நிலவுகின்றது. அதேசமயம் பண்டைய காலம் முதல் தமிழ் மன்னர்களும், பெளத்த சிங்கள மன்னர்களும், அரசப் பிரதானிகளும் கட்டிய கோயில்களை, ஐரோப்பாவில் இருந்து இலங் கைக்கு வந்த போர்த் துக்கேயர் தான் பெருமளவில் அழித்தார்கள் என வரலாற்று நூல்கள் கூறுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கில் இவ ர்கள் அழித்த கோயில் கள் ஆயிரத்துக்கும் அதிகம் எனத் தெரிகின் றது. தென் இலங் கையில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களும், சில பெளத்த விகாரைகளும் இவர்களால் அழிக்கப்பட்டன. இவர்களின் பின் வந்த ஒல்லாந்தரும் இதேபோல் ஆலய அழிப்பில் ஈடுபட்டனர்.

இந்நாசகார நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணம், தமது கிறிஸ் தவ சமயத்தை இலங்கை மக்களிடையே பரப்ப வேண்டும் எனும் நோக்கமும், கோயில்களில் காணப்படும் பாரிய கற் தூண்களைக் கொண்டு தமது பாதுகாப்பிற்காக கோட்டைகளைக் கட்ட வேண்டும் எனும் நோக்கமுமாகும். அத்துடன் கோயில்களை இடித்து, அழித்து அதன் மீது கிறிஸ்தவ தேவாலயங்களையும் கட்டினர். வடக்கு கிழக் கில் இவ்விதம் ஐரோப்பியர்களால் இடித்து அழிக்கப்பட்ட கோயில் கள் ஆங்கிலேயர் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டன.

ஆனால் தென்னிலங்கையில் அழிக்கப் பட்ட சில கோயில்கள் தேவாலய என மாற்றம் பெற்று பெளத்த மக்களால் வணங்கப் படு கின்றன. அதேசமயம் பல கோயில்கள் மீண்டும் கட்டப்படாமல் மண்ணுள் புதையுண்டு கிடக்கின்றன. இவ்வாறு மீண்டும் கட்டப் படாமல் புதைந்து கிடக்கும் கோயில்களில் ஒன்றே பெந்தோட்டை யில் அமைந்திருந்த பிரசித்தி பெற்ற காளி கோயிலாகும்.

சுமார் 700 வருட வரலாற்றைக் கொண்ட இக்காளிகோயில் பொ.ஆ. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டது. பின்பு சுமார் 400 ஆண்டுகளின் பின், 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் இடித்து அழிக்கப் பட்டது. அதன் பின் 300 வருடங்களாக சிதைந்து கிடந்த இக்கோயி லை 1884ஆம் ஆண்டு ஆர்த்தர் ஜெயவர்தன எனும் ஆராய்ச்சியாளர் மீண்டும் கட்டி எழுப்ப முயற்சிகள் மேற் கொண்டார். இருப்பினும் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. கோயில் மீண்டும் கட்டப்பட வில்லை.

இந்நிலையில் கடந்த 20 வருடங்களாக தமிழர் மற்றும் இந்து சமயம் தொடர்பான ஆய்வுகளில் நான் ஈடு பட்டிருந்த பொது, சில சைவக் கோயில்கள் வடக்கு, கிழக்கில் மண்ணுள் மறைந்து கிடப்பதையும், தென்னிலங்கையில் பல சைவக் கோயில்கள் அடையாளம் தெரியா மல் புதைந்து கிடப்பதையும் அறிய முடிந்தது. இவ்வாறு புதைந்து கிடக்கும் எமது கோயில்களை மீண்டும் கட்டி யெழுப்பி, இலங்கை முழுவதிலும் வாழ்ந்த தமிழரின் பாரம் பரியமிக்க அடையாளங் களை நிலை நிறுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் இந்நூலை எழுதியுள்ளேன். சக்தியுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் இவ்விடய த்தைக் கையிலெடுத்து, அழிந்து போன நம் காளி கோயிலை மீண் டும் கட்டியெழுப்பி, தென்னிலங்கையில் தமிழரின் அடையாளத்தை நிலைநிறுத்தி, பாதுகாக்க வேண்டும் என இந்நூல் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

என்.கே.எஸ்.திருச்செல்வம் 
வரலாற்று ஆய்வாளர் 
இலங்கை
  


No comments:

Post a Comment